Shadow

“மனித உருவில் திரியும் மிருகங்கள்” – காவ்யா ஷெட்டி

பிரபல விளம்பர மாடல் காவ்யா ஷெட்டி இப்போது ‘ ஷிவானி’  திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ஷிவானி ஒரு திகில் படம் என்றும் அதில் அவருடைய பாத்திரம் திகில் ஊட்டுவதாக இருக்கும் என கூறப்படுவதைக் கேட்டு சிரித்த ஷிவானி,  “என்னுடைய நடிப்பு எனக்கு திருப்தியாக இருந்தது , அது தவிர  படப்பிடிப்பு குழுவினரும் என்னை பாராட்டுவது எனக்கு மகிழ்ச்சியே. 

நான் கதையை சொல்ல மாட்டேன். ஆனால் ஒன்று சொல்லியாக வேண்டும்.  நான் இயல்பாகவே பயந்த பெண் தான். இரவில் தனியாக செல்ல இன்னமும் அச்சம் தான். பயம் பேய் , பிசாசினால் அல்ல. மனித உருவில் திரியும் மிருகங்களால் தான். பெண்களுக்கு எதிராகத் தொடரும் வன்கொடுமைகள் மனதை காயப்படுத்துகிறது. என் மனம் மும்பை பெண்  புகைப்பட நிருபருக்காக அழுகிறது.  என் கருத்தின் படி சினிமா உலகம், பொதுவான சமுதாய உலகை விட பாதுகாப்பானது என்று தான் கருதுகிறேன்” என்றார் காவ்யா ஷெட்டி.

அவருக்கு மிகவும் பிடித்த கதாநாயகன் யார் என்று கேட்டதற்கு, கண் இமைக்காமல்,  ‘ஆர்யா’ என்று கூறுகிறார். 

Leave a Reply