Shadow

மன்னிப்பாயா…???

பத்து வருடங்களுக்கு முன் கலைந்த
சோனியாவின் குங்கும பொட்டா
இன்று
ஆறு போல் ஓடுகிறது
எம் ஈழத்தில் …!!!
நாம் என்று இருக்க…
இடமொன்று இல்லையடா உனக்கு…???
கைதியாய் ஈழதிலும்
அகதியாய் பிற நாட்டிலும் வாழ்வதா
உன் விதி விலக்கு…???
நாடு ஒன்று இருந்தும்
அண்டை நாட்டை கைப்பற்ற துடிக்கும் பாகிஸ்தானியர்களுடனா
உன்னை
தீவிரவாதி என்று துலாபாரம் செய்வது …???
கோழையாய் போன தமிழனை நம்பி
ஈனமாய் போன ஈழ தமிழ் மண்ணே….!!!!
                 – மன்னித்து விடு என்னை…!!!!

– சார்லி கவி

Leave a Reply