Shadow

மாமனிதர்

நாதியற்று நின்றுகொண்டிருக்கும்
அவரை யாரும் கண்டுகொள்ளவதில்லை
வந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள
பிறந்தநாள், நினைவுநாள் தவிர
தினமும் நாங்கள் சென்று அன்பை பொழிகிறோம்
எச்சங்களாய்
இறந்தபிறகும் எங்களை சுமந்துகொண்டு
உலகத்தை உயரமான இடத்திலிருந்து
பார்த்து புரிந்துகொள்ள சொன்னார்
காய்ந்துபோய் அவர்கழுத்தில்
கிடக்கும் பூமாலை மூலம்

– சே.ராஜப்ரியன்