மோமன்ட் என்டர்டெயின்மென்ட் சார்பாக G.A.ஹரி கிருஷ்ணன் மற்றும் “தி ஹிந்து” ரங்கராஜன் அவர்களின் பேரன் ரோஹித் ரமேஷின் WTF எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த “மோ” படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் மோமன்ட் என்டர்டெயின்மென்ட் சார்பாக G.A.ஹரி கிருஷ்ணன் புதிய படமொன்றை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கவுள்ளார்.
நயன்தாரா நடிப்பில் வெளிவந்து அனைவரின் பாராட்டையும் பெற்று வசுலில் சாதனை படைத்த மாயா படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன் இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கவுள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கான நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்புத் தரப்புக் கூறியுள்ளது. தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர் என்பதால், அவரது அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்பவே ரசிகர்களிடம் கூடியுள்ளது.
தயாரிப்பாளர் G.A.ஹரி கிருஷ்ணன், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா’ படத்திலும், காக்கா முட்டை படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ‘ஆண்டவன் கட்டளை’ உள்ளிட்ட பல படங்களுக்கு தயாரிப்பு மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடதக்கது.