Shadow

மாரடைப்பு

பெயர்: மாரடைப்பு (Mycocardial Infarction)

தோற்றம்: இதயத் தொழிற்பாடு பாதிப்படைதல்

நெஞ்சு வலி

காரணம்:

பிராணவாயு, குளுக்கோஸ் என்பன இதயத்தசையை அடையவிடாது பாதிப்படைவதால்..

காரணிகள்:

>> பரம்பரையில் இந்நோய் உடையவர்களைத் தாக்கும்
>> பால் அடைப்படையில் பெண்களை விட ஆண்களுக்கு இந்நோய் வர வாய்ப்புகள் அதிகம்
>> வயது கூடக்கூட நாடிச்சுவர் விறைப்பு சுவர்களின் உட்புற கொழுப்பின் ஆவு கூடுவதால்..
>> கீழைத்தேயத்தவர்கள் உணவில் கொழுப்பு அதிகம் சேர்ப்பதால்
>> நீரிழிவு வியாதி உடையவர்களுக்கு

அறிகுறிகள்:

>> நெஞ்சை இறுக்குவது போன்ற வலி
>> மூச்சுக் கஷ்டம்
>> மயக்கம்
>> வாந்தி
>> களைப்பு
>> உடல் வெளிறல்
>> குருதி அமுக்கம் குறைதல்
>> வியர்த்தல்
>> இதயத்துடிப்புக் கூடல்
>> நாடித்துடிப்பு கனவளவு குறைதல்
>> சிறுநீர் குறைதல்
>> 20 சதவிகிதத்தினருக்கு இவற்றில் எந்தக் குறி குணமும் ஏற்படாது

உபத்திரவங்கள்:

>> இதயத்துடிப்பு ஒழுங்கு விலகல்
>> இதயம் சார் அதிர்ச்சி
>> குருதி கட்டிபடுதல் தொடர்பான பிரச்சினைகள்
>> இதயம் கிழிதல்
>> தீவிர இதயப் புறவணி அழற்சி
>> நாட்பட்ட இதயப்பாதிப்பு
>> இதயம் பெருத்தல்
>> மீளவும் இதயத்தசை இறத்தல்

சோதனைகள்:

>> குருதிப் பரிசோதனை மூலம்
>> இதய மின் அலை வரைபுப் பரிசோதனை
>> எக்ஸ்கதிர் பரிசோதனை

தடுக்கும் வழிகள்:

>> உடற்பருமனை உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி மூலம் குறைத்தல்
>> புகைப்பிடித்தலை நிறுத்துதல்
>> மன அழுத்தத்தைக் குறைத்தல்
>> கொழுப்பு, கார்போஹைட்ரேட் அற்ற உணவு வகைகளை உண்ணல்
>> சொகுசான வாழ்க்கையைத் தவிர்த்தல்