
தமிழ் நாட்டின் மிக முக்கிய கலாச்சார விழாவாக கொண்டாடப்படும் மசானக் கொள்ளை என்று அழைக்கப்படும் மயானக் கொள்ளை திருவிழா இன்று தமிழகமெங்கும் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில், கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையமைப்பில், ஜெயம் ரவி ஜோடியாக த்ரிஷா நடிக்க, வட சென்னையின் குத்து சண்டை கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படம் ‘பூலோகம் ‘ படத்தின் சில முக்கிய காட்சிகள் மசானக் கொள்ளையை முன்னிட்டு படமாக்கப்பட்டது.
இந்தக் கலாச்சாரத்தை முழுமையாகக் காண சென்னை அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் விஜயம் செய்தனர். இந்த விழாவைக் கண்ட ஜெயம் ரவி, ‘இந்த அனுபவம் முற்றிலும் புதுமையானது. இந்த மண்ணின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒரு மண்ணின் மணம் சார்ந்த படத்தில் நடிப்பது எனக்கு அளவிட முடியாத பெருமை. பூலோகம் போன்ற ‘மாஸ்’ கதையும், கதைக் களமும் என்னை மக்களிடம் மிக எளிதாக்க ஐக்கியமாகி விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை’ என்றார்.