Shadow

மின்மினிப் பூ

இரவில் மட்டும் பூக்கிறது
அந்த மரம்
அதுவும் மின்மினிப் பூக்களாய்!

விடியலில் ஒரு பூ கூட
இருப்பதில்லை
மொட்டுகள் இருக்கிறதா
என தேடிப்பார்த்தேன்
அதுவும் பார்ப்பதற்கில்லை

இருட்டில் மட்டும்
தெரிகிறது
வெளிச்சம் வருவதற்கு முன்னே
மறைகிறது
யார் பறிக்கிறார்களோ
தினம் தினம்

– சே.ராஜப்ரியன்