சம்பூர்ணா, ஒரு காஃபி டேபிள் புத்தகம். இதில் கர்நாடக இசை கலைஞர் பத்மஸ்ரீ சுதா ரகுநாதனின் இசைப்பயணம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவருக்கு கடந்த ஆண்டு, “சங்கீத கலாநிதி” விருது வழங்கப்பட்டது. இவரது ஆரம்பக்கால இசை வாழ்க்கையாக கருதப்படும், பத்மபூஷன் டாக்டர் எம்.எல்.வசந்தகுமாரியின் சிஷ்யையாக இருந்ததில் தொடங்கி, கடந்த ஆண்டு கர்நாடக இசை உலகத்தின் மிகச் சிறந்த விருதுகளில் ஒன்றான ‘சங்கீத கலாநிதி’ பட்டம்பெற்ற வரை அனைத்து நிகழ்வுகளும் இந்தப் புத்தகத்தில் பேசப்பட்டுள்ளன.
“கடும் உழைப்பே, புகழுக்கும் வெற்றிக்கும் விலையாகும். ஒவ்வொரு நிமிட வேலையிலும் முழு ஈடுபாடு, வெற்றியோ தோல்வியோ, எப்போதுமே தனது சிறந்ததைத்தான் கொடுக்க வேண்டும் என்ற தீர்மானம் அவசியம். நான் இந்நிலையை அடைந்ததற்கு, எனது ஒருமைப்பட்ட குவிமையமும், என்னைச் சுற்றியுள்ள சிறந்த ஆன்மாக்களும் கடவுளும் அளித்த ஆதரவே காரணம். இந்தப் புத்தகம், என்னை இந்நிலையடைய வைத்த எனது வாழ்வின் மிகச் சிறந்த தருணங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளிம்” எனக் கூறுகிறார் சுதா ரகுநாதன்.
இப்புத்தகத்தில், இந்த தீர்மானமான இசைக்கலைஞரின் பாதை திரு.டி.செல்வகுமார் அவர்களின் அழகிய புகைப்படங்களாகவும், ஓவியர் திரு.AP.ஸ்ரீதர் அவர்களின் ஓவியங்களாகவும் இடம்பெற்றுள்ளன. இந்தப் புத்தகத்தை தீப்தி சசாரியா அவர்கள் எழுதியுள்ளார். இவருடன் ஈனைந்து உஷா தினேஷ், சுந்தர் ராமச்சந்திரன், கெளஷிக், ரகுநாதன், உர்மி தத்தா, மாலவிகா ரகுநாதன் அவர்களும் தமது பங்கினை அளித்துள்ளனர்.
இந்தப் புத்தகத்தை இனையதளம் மூலம் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். பெற வேண்டிய முகவரி: http://www.sales.audiomedia.in
சமுதாய அறக்கட்டளைப்பற்றி: சுதா ரகுநாதனின் சமுதாய அறக்கட்டளை, அவருக்கு சமுதாயம் அளிக்கும் அளவு கடந்த அன்பு, அங்கிகாரம், பாராட்டு இவற்றின்பால் அவர் கொண்ட அன்பின் பிரதிபலிப்பாகும். சமுதாய அறக்கட்டளை ஆதரவற்ற பிள்ளைகளின் உடல்நலத்தை பேணிப் பாதுகாக்கிறது. இந்த அறக்கட்டளை பிள்ளைகளின் இருதய அறுவைச் சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை மற்றும் இவர்களுக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்களின் கட்டுமானத்திற்காக நிதி. சமுதாய அறக்கட்டளை மூலம் வழங்கப்படும்.
– கோலிவுட் பாலா