Shadow

யாசகம்

பயணசீட்டு வாங்குவதற்கு
மட்டுமிருக்கிறது என்னிடத்தில்
கூட்டத்திடம் கையேந்திக்
கும்பிடு வருபவருக்கு
எப்படித் தெரியும் என்நிலைமை

சில்லறை போட்டவரெல்லாம்
என்னை இப்படிப் பார்ப்பது
என்ன நியாயம்?

– சே.ராஜப்ரியன்