Shadow

யுரேகாவின் தொப்பி

Thoppi தொப்பி

மதுரை சம்பவம் எடுத்த இயக்குநரின் மூன்றாவது படம் தொப்பி. படத்தில் நாயகனாக முரளிராம் அறிமுகமாகிறார்; நாயகியாக மலையாள வரவான ரக்ஷா நடிக்கிறார். 

நியூசிலாந்தில் 25 வருடங்களாக ஹோட்டல் நடத்தி வரும் நாமக்கலைச் சேர்ந்த பரமராஜ் இப்படத்தைத் தயாரித்துள்ளார். அவர் பாக்கியராஜ் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர். தனது சினிமா எடுக்கும் கனவை நனவாக்கியதோடு, தனது அபிமான நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜையே தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்க வைத்திருந்தார். அதே போல், படத்தின் இசையமைப்பாளரான ராம்பிரசாத் சுந்தரு, வெளிநாட்டில் வாழ்பவரே! அமெரிக்க வாழ்த் தமிழரின் இசையில், பாடல்கள் நேட்டிவிட்டி (Nativity) இசையுடன் ஒலிக்கிறது என்பதை விட, வைரமுத்துவின் பாடல் வரிகளைக் கேட்க முடிகிறது என்பது கூடுதல் விசேஷம். 

ஒளிப்பதிவாளர் சுகுமார்Denotified criminals என குற்றப் பரம்பரையில் சேர்க்கப்பட்டவர்களைப் பற்றி கள ஆய்வு செய்தே திரைக்கதை அமைத்ததாகக் கூறியுள்ளார் இயக்குநர் யுரேகா. மைனா புகழ் ஒளிப்பதிவாளர் M.சுகுமார்தான் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். கதையைக் கேட்ட சுகுமார், தான் தான் ஒளிப்பதிவு செய்வேன் என ஆர்வத்தோடு சம்மதம் தெரிவித்துள்ளார். யுரேகா சுகுமாரைத்தான் நாயகனாக நடிக்கச் சொல்லிக் கேட்டுள்ளார். ஆனால் அவர் முரளிராமை அழைத்து வந்து, முரளி நாயகனாக நடித்தால்தான் நான் இப்படத்தில் ஒளிப்பதிவு செய்வேன் எனச் சொல்லியுள்ளார். சற்றும் மனம் தளராத யுரேகா, “மாடு” எனும் தனது அடுத்த படத்தில் சுகுமாரை நாயகனாக நடிக்க சம்மதிக்க வைத்துள்ளார்.  குரங்கனி, பெரிய குளம் முதலிய இடங்களை மீண்டும் அழகாக திரையில் கொண்டு வந்துள்ளார் சுகுமார். 

தொப்பி எனும் தலைப்பு காவல்காரர் அணியும் தொப்பியையும், அது தொடர்பான அதிகாரத்தையும் குறிக்கிறது. மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த நாயகனுக்கு காவல்துறையில் சேர வேண்டுமென ஆசை. கதை அது தொடர்பாகவே நகர்கிறதென யூகிக்க முடிகிறது.

Thoppi தொப்பி