
ஏ தமிழ் சினிமாவே!
எனக்கு உன்னை
எவ்வளவு பிடிக்கும்
என்று நீ அறிவாயா?
கருப்பு வெள்ளை
காலத்திலேயே
காண்பவர்களின்
கனவுகள் உன்னால்
வண்ணம் பெற்றன.
இன்று நீயோ
வண்ண பெண்ணாய்
கனவு தேவதையாய்
புவனத்தை
பவனி வருகிறாய்.
ஆனால் உனது
ஆதாரங்கள்
அக்கரை சீமையில்
இருந்து
இறக்குமதி ஆகிறது.
ஏன் உனக்கு
இந்த அவல
நிலை?
கதைக்கு நாயகி
தேடும்
காலம் போய்
கவர்ச்சிக்காக நாயகி
என்ற இழிவு
ஏன் இங்கு
என்று உன்னிடம்
தொற்றியது?
கற்பனைகள் கோடி
கொட்டிக் கிடந்தாலும்
இங்கே உனக்கு
வியாபரம்தான்
பிரதானம்.
எண்ணற்றவர்களுக்கு
வாழ்வு அளிக்கிறாய்.
எனினும்
ஒரு குறுகிய
வட்டத்துக்குள்
நீ
சுத்திச் சுத்தி
வருவதேன்?
புரட்சி புரியும் நாயகன்
மன்னர் மகளாய் நாயகி
சூழ்ச்சி புரியும் வில்லன்
இதொருகாலம்.
நல்லவன் நாயகன்
காதல் நாயகி
ரவுடி வில்லன்
இதொரு காலம்.
ரவுடி நாயகன்
காதல் நாயகி
அரசியல் வில்லன்
இதொரு காலம்.
நன் கதைகள்
உன் மூலம்
திரையேறுவது
எக்காலம்?
– தினேஷ் ராம்