Shadow

இயக்குநர் ராதா மோகனின் லட்சியப் பயணம்

உப்பு கருவாடு

மனதின் மென்னுணர்வுகளை வருடிவிட்ட படங்களான அழகிய தீயே, மொழி, அபியும் நானும் போன்ற படங்களை மறக்க இயலுமா? அதனாலேயே தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் ராதா மோகன் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். அவருடைய அடுத்த படம் உப்பு கருவாடு.

ராம்ஜி நரசிம்மனின் First copy pictures மற்றும் ராதா மோகனின் Night show pictures ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் ‘உப்பு கருவாடு’ ரசிகர்களைக் கவரும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படமாகும். இந்தப் படத்தின் கதை ஒருவருடைய லட்சியத்துக்கும், அந்த லட்சியப் பயணத்தைத் தொடர விடாமல் சிறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது நமக்குள் நாமே மேற்கொள்ளும் சமரசத்துக்கும் இடையே நடக்கும் போராட்டத்தைப் பற்றிய கதை ஆகும்.

Uppu Karuvaadu

“லட்சியம் உள்ளவர்கள் அதில் சமரசம் ஆகி விடக் கூடாது. இந்த சமரசமே நம்மை லட்சியப் பயணம் மேற்கொள்ள விடாமல் தடுக்கும்.இந்தக் கதையை நகைச்சுவை கலந்து வழுங்குகிறேன். நகைச்சுவைப் படங்கள் எனக்கு எப்பொழுதுமே ஒரு தீரா மோகம் உண்டு. என்னுடைய முந்தைய படங்களில் கூட நகைச்சுவை பிரதானமாகத் தெரியும். உப்பு(க்) கருவாடு படத்தில் எனக்கு அதற்கேற்ப சரியான கதைக்களம் அமைந்து இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

ராதா மோகன்சமீபமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள கருணாகரனுடன் நந்திதா இணைந்து நடித்து உள்ளார். எம் எஸ் பாஸ்கர், மயில் சாமி, குமாரவேல், சாம்ஸ், குமாரவேல், நாராயணன், புது முகம் ரக்ஷிதா , சரவணன் மற்றும் ‘டவுட்’ செந்தில் ஆகியோர் நடிக்கின்றனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். பிரசித்தி பெற்ற கிட்டார் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் இசை அமைப்பாளராக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். மதன் கார்க்கி பாடல்கள் இயற்ற, கதிர் அரங்கமைக்க,ஜெய் படத்தொகுப்பு செய்கிறார். பிரபல நடன அமைப்பாளர் சதீஷ் நடனம் அமைக்கும் பணியுடன் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். வசனம் இயற்றுபவர் பார்த்திபன். திரைக்கதை அமைத்து நானே இயக்குகிறேன். First copy pictures நிறுவனத்தின் ராம்ஜி நரசிம்மன் உடன் இணைந்து இந்தப் படத்தை நானும் தயாரிக்கிறேன்.கடல் சார்ந்த பகுதிகளில் முழுவதுமாகப் படமாக்கப்படும். ‘உப்பு கருவாடு’ அந்த மனிதர்களின் வாழ்கை முறையை சித்தரிக்கும் படமாகும்” என படத்தைப் பற்றித் தெரிவித்தார் இயக்குநர் ராதா மோகன்.

தயாரிப்பாளர் ராம்ஜி நரசிம்மன் கூறுகையில் ‘ராதா மோகனிடம் இந்தக் கதையை நான் எதேச்சையாகக் கேட்க நேரிட்டது. கேட்ட மாத்திரத்திலே இந்தப் படத்தைத் தயாரிக்க வேண்டும் என உந்துதல் ஏற்பட்டது. அந்த உந்துதலே உப்புக் கருவாடு உருவாகக் காரணம், இடைவிடாமல் சிரிக்க வைக்கும் வல்லமை படைத்த கதை ‘உப்பு கருவாடு’. இந்தக் கோடை விடுமுறையில் படத்தை வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறோம்’ என்றார்.