“’பாண்டிய நாடு’ படத்தில் விக்ராந்துக்கும் விஷாலுக்கும் கெமிஸ்ட்ரி நல்லாயிருந்தது. ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் லட்சுமி மேனனை மட்டும் மீண்டும் நடிக்க வச்சிருக்கார். விக்ராந்தை ஏன் கூப்பிடலைன்னு தெரியலை. அவர் ரொம்ப வருத்தப்பட்டார். சரி கவலைப்படாத.. அனைவருக்கும் முன் கேட்டுடலாம் சொல்லி இப்போ நான் கேட்டுட்டேன். விஷால் இதற்கு பதில் சொல்வார்னு எதிர்பார்க்கிறேன்.
‘பாண்டிய நாடு’ ஷூட்டிங்கின் பொழுது, எனக்கும் ஷூட் போயிட்டிருந்தது. என்னால செட்டுக்குப் போய் லட்சுமி மேனனைப் பார்க்க முடியலை. இந்தப் படத்திலாவது எப்படியாவது பார்த்து ‘ஹை’ சொல்லணும்னு நினைச்சேன். ஆனா ‘சாரி.. இன்னிக்கு லட்சுமி மேணுடன் நெருக்கமான சில காட்சிகள் இருக்கு. டிஸ்டர்ப் பண்ணாத’ என எஸ்.எம்.எஸ். அனுப்பினார் விஷால்.
என்னடா இதுன்னு நினைச்சுக்கிட்டு.. ‘சரி இன்னிக்கு வர்றேன்’ என இன்னொரு நாள் சொன்னேன். ‘சாரி.. லட்சுமி மேனனுடன் தண்ணிக்கு அடியில ஷூட்டிங் இருக்கு. என்னைத் தொந்தரவு பண்ணாதே!’ என மெஸ்சேஜ் அனுப்பினார். அது என்னன்னே தெரில.. லட்சுமி மேனனை அப்படி ப்ரொடெக்ட் பண்றார்.
ஒருநாள் சொல்லாம கொள்ளாம நேர்ல போயிட்டேன். பயங்கரமா வரவேற்றாரு. ஒண்ணா லன்ச் கேர்வன்ல சாப்பிட்டம். சரி பரவாயில்லை.. ஆள் இன்னிக்கு வேற மாதிரியிருக்கார் எப்படியும் லட்சுமி மேனனைப் பார்த்துடலாம்னு நினைச்சேன். அன்னிக்கு லட்சுமி மேனனுக்கு ஷூட் இல்லை. அதனால்தான் இவ்ளோ வரவேற்பு போலன்னு நினைச்சேன். அதென்னமோ கொஞ்ச நாளாக 18 வயசு பையன் போலவே பிஹேவ் பண்றார்.
‘நான் சிகப்பு மனிதன்’ படம் கெமிஸ்ட்ரிக்காகவே நல்லா போகும்னு தெரியுது” என்றார் ‘நான் சிகப்பு மனிதன்’ இசை வெளியீடு விழாவில் பேசிய நடிகர் விஷ்ணு.
“நான் லக்ஷ்மி மேனனை ப்ரொடெக்ட் பண்ணலை. விஷ்ணுவைத்தான் ப்ரொடெக்ட் பண்ண விருப்பப்பட்டேன். ஏன்னா 17 வயசுப் பொண்ணு லட்சுமி மேனன். விஷ்ணுவின் அப்பாவே (ரமேஷ் குடவாலா, ஐ.பி.எஸ். அதிகாரி) விஷ்ணுவை அரெஸ்ட் பண்ற மாதிரி சூழ்நிலை ஏற்படக் கூடாதுன்னுதான் உன்னைத் தள்ளித் தள்ளி வச்சேன்.
விக்ராந்த் இனிமே என்கூட சேர்ந்து நடிக்கக் கூடாது; தனியா நடிக்கணும் என்பதற்காகத்தான் விஷால் ஃபிலிம் ஃபேக்டரில முயற்சி பண்றோம். அதுக்கான அறிவிப்பு கூடிய சீக்கிரம் வரும். சும்மா சும்மா என்னொட நடிச்சா வேலைக்கு ஆகாது. அடுத்த கட்டமாக.. சோலோ ஹீரோவாக அவர் ஜெயிக்கணும்.
விஷ்ணு இதுக்கு மேலயும் நீ லட்சுமி மேனன் பத்தி எங்கயாச்சும் வெளில பேசுனா.. நீ வாங்கினா கிரிக்கெட் பேட்டால்தான் நான் உனக்கு பதில் சொல்வேன்” என்றார் விஷால் சிரித்தவாறே!