Shadow

வராத கடிதத்திற்கு பதிலாக

இதுவரை யாரும்
எனக்கு எழுதாத காதல் கடிதத்தை
படிக்கப் போகிறேன்
கதவை தாழிட்டு
இருள் நிரம்பி வழியும் அறையினுள்
ஒற்றை விளக்கின் ஒளிதனில்…

வார்த்தைகள் என்னவாகயிருக்கும்
என பதட்டத்தில்
கடிதத்தை பிரிக்கிறேன்
கைகள் நடுங்குகிறது
வியர்வையால் குளித்துக்கொண்டிருக்கிறேன்
அதனால் நான் போட்டிருக்கும் ஆடையினாலே
என்னுடம்பு துவட்டிகொள்கிறது.

ஈரமாகிப்போனது கடிதத்தின் சிலபகுதிகள்
எத்தனை முறைப்படித்தாலும்
புரியவில்லை முடிவில்
வெறு(ம்)மைதான் மிச்சம்.

இனிமேலெனக்கு
யாரும் கடிதம் எழுதாதீர்கள்
தயவுசெய்து.

– சே.ராஜப்ரியன்