தென் கொரியாவும் சீனாவும் இணைந்து தயாரிக்கும் படம், மிஸ்டர் கோ (Mr. Go). ஆசியாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மிஸ்டர் கோ படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
நவம்பர் 14 அன்று இப்படம் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வெளியாகவுள்ளது. குழந்தைகளுக்கான படமாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் முழுவதும் 3டி-யில் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் முதலிய மொழிகளில் வெளியாகும் முதல் கொரியப்படம் ‘மிஸ்டர் கோ’ என்பது குறிப்பிடத்தக்கது.
பேஸ்பால் விளையாடும் லிங் லிங் எனும் 3டி டிஜிட்டல் கதாபாத்திரமான கொரில்லா தான் படத்தின் சிறப்பம்சம். படத்தில் 100% கொரியன் தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டுள்ளது. கொரியன் பட வரலாறில் இது முதல்முறையாகும்.
‘200 பவுண்ட்ஸ் ப்யூட்டி’ மற்றும் ‘டேக் ஆஃப்’ படங்களின் இயக்குநரான கிம் யாங்-க்வா (Kim Yong Hwa) தான் இப்படத்தின் இயக்குநரும். லிங் லிங் எனும் கொரில்லா பேஸ்பால் டீம் ஒன்றில் சேர்ந்து கலக்குவது தான் படத்தின் கதை.
படத்தை வெளியிடுபவர்கள், ஆரா சினிமாஸ் (Auraa Cinemas) – சென்னை.