Shadow

“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” – இசை வெளியீட்டு விழா

Vallavanukku Pullum Aayutham

“சந்தானம் சார் நடிச்சா நல்லாயிருக்கும்னு கிரேஸி மோகன் சார் சொன்னார். அவர் டேட் கிடைக்காதுன்னு சொன்னாங்க. இரண்டு நாள் வந்து நடிச்சுக் கொடுத்தார். பார்த்ததும், அழகா இருக்காரே இவரை நடிக்க வச்சா ஏதாச்சும் பிரச்சனை ஆயிடுமோன்னு நினைச்சேன். இரண்டு நாளும், டைம்க்கு வந்து எப்படி டையலாகை இன்னும் அழகா பண்ணலாம்னு வொர்க் பண்ணிட்டு இருந்தார். அந்த க்வாலிட்டி ரொம்ப பிடிச்சிருந்தது.

என்னோட ‘மரியாதை ராமண்ணா’ படத்தில் நடிக்கிறார். ரொம்ப சந்தோஷமாக இருக்கு. ஒரு சாதாரண மனுஷன் அசாதாரண சூழலில் இருந்தா என்னாகும் என்பதுதான் கதை. அவருக்கு இந்த ஜானர் சூட் ஆகும். ஏன்னா அவர் அழகா இருக்காங்க. நல்லா காமெடி பண்றாங்க. தெலுங்கில் ஹிட்டாச்சு. ஹிந்தியில் ரொம்ப ஹிட்டாச்சு. தமிழ்ல ரொம்ப ரொம்ப ஹிட்டாகும்னு நம்புறேன்” என்றார் தெலுங்கின் சூப்பர் ஸ்டார் இயக்குநரான ராஜ்மெளலி.

“நீரோன்னா சிக்ஸ் பேக் வச்சிருக்கணும், லான்றிக்குப் போட்டாப்ல சிவப்பா இருக்கணும்னு அவசியமில்லை. ஹீரோங்கிறது ஒரு குணம். அது சந்தானம்கிட்ட நிறையவே இருக்கு. அவருடைய ஆயுதம் புத்திக்கூர்மை” என்று சொன்ன பார்த்திபன் கதை ஒன்று சொல்ல ஆரம்பித்தார்.

“ஒரு காட்டில் சிங்கமும் நாயும் எதிர் எதிரே வந்துட்டிருக்கு. அந்த சிங்கத்துக்கு மாட்டினா நாய் காலி. நாய் உடனே பக்கத்தில் இருந்த பெரிய எலும்புத் துண்டைக் கடிச்சுக்கிட்டு, “இந்த சிங்கத்தோட கறி ரொம்ப டேஸ்ட்டா இருக்கு”ன்னு சொல்லுது. சிங்கம் ஷாக்காகி, ‘இந்த நாய் சிங்கத்தையே அடிச்சுச் சாப்பிடும் போல’ன்னு நினைச்சு பயந்து ஓடிடுச்சு. மரத்து மேளிருந்து பார்த்துட்டிருந்த குரங்கு ஒண்ணு சிங்கத்துக்கிட்ட போய் எல்லாத்தையும் சொல்லுது. சிங்கம் கோபமாகி குரங்குடன் நாயைத் தேடி வருது. டர்னிங்லயே இதைக் கவனிச்ச நாய், அதே எலும்புத் துண்டை வாயில் வச்சுக்கிட்டு, “சாப்பிடறதுக்கு இன்னொரு சிங்கத்தைக் கொண்டு வர்றேன்னு போன குரங்கை இன்னும் காணோமே!”ன்னு சொல்லுச்சு. அதைக் கேட்ட குரங்கு தாவிக் குதிச்சு ஓடிடுச்சு. சிங்கம் பயந்து ஓடித் தப்பிடுச்சு. இந்தக் கதையைப் பொறுத்தவரை நாய்தான் ஹீரோ. ஒரு படத்துல, அதிகமாக ரசிகர்களைத் தக்க வைக்கிற திரமை சந்தானத்திடம் நிரையவே இருக்கு. ஆக இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும். வாழ்த்துகள்” என முடித்தார் பார்த்திபன்.

“என் முதல் படத்தில் எனக்கிருந்த டென்ஷன் அவருக்கு இருக்காது. கான்ஃபிடன்டாகப் பண்ணியிருப்பார். அந்தப் படத்தை எப்படி வெற்றிப்படம் ஆக்குனீங்களோ, அதைவிட இந்தப் படத்தை வெற்றியடைய வைக்கணும்னு கேட்டுக்கிறேன்.

‘வேணாம் மச்சான் வேணாம்’ பாட்டுக்கு ரிகர்சல் பண்ணச் சொல்லிக் கெஞ்சுவார் ராஜேஷ் சார். சும்மா கையை ஆட்டுற மாதிரி சிம்பிள் ஸ்டெப்பாகத்தான் இருக்கும். நான் அதைக் கஷ்டப்பட்டு ஆட ட்ரை பண்ண, ‘முதலாளி ரொம்ப ஆட்டாதீங்க. டஃப்பான ஸ்டெப்பாகயிருக்கு’ன்னு சொல்வார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனா இன்னும் ஸ்டெப்ஸை கம்மி பண்ணிடுவார். பாட்டுத்தான் நல்லா இருக்கே.. ஏண் இவ்ளோ கஷ்டப்பட்டு ஆடணும்னு கேட்பார். கதிர்வேலன் காதல் படத்துல, ‘பல்லாக்கு தேவதை’ பாட்டுக்கு மாஸ்டரோட அசிஸ்டென்ட் வந்து கொஞ்சம் ஸ்டெப்ஸ்லாம் இருக்க்ன்னு சொன்னார். எனக்குப் பொதுவா ஹீரோயின் கூட ஆடுறதுதான் கஷ்டம். அவங்களுக்குப் போட்டியா ஆடணும். சந்தானம் கூட டான்ஸ்ன்னா.. டான்ஸ் ஆட வேண்டியதில்லைன்னு சந்தோஷமாக இருந்தேன். ஆனா அவர் சில கஷ்டமான ஸ்டெப்ஸ்லாம் ஆட ஒத்துக்கிட்டாருன்னு அசிஸ்டென்ட் சொன்னார். நான் உடனே அவர்ட்ட போய், ‘என்னாச்சு உங்களுக்கு?’ன்னு கேட்டேன்.

‘இல்ல முதலாளி. நானும் ஹீரோவாகிட்டேன். சோ டான்ஸ் கிளாஸ்லாம் போறேன்’னு சொன்னாரு. நான் ஷாக்காகி, ‘யோவ்.. சொல்லிட்டுச் செய்யுங்கப்ப.. உங்களை நம்பித்தான் நான் டான்சுங்கிற பேர்ல ஏதோ பண்ணீட்டிருக்கேன்’ எனச் சொன்னேன். அப்பத்தான் தெரியும்.. அவர் தன் படத்துக்கு மெனக்கெட்டு வொர்க் பண்றாருன்னு. அடுத்தவங்க ஹீரோவக நடிக்கிற படத்துக்கே அவரும் அவங்க டீமும் ரொம்ப கஷ்டப்பட்டு வொர்க் பண்ணுவாங்க. கண்டிப்பாக அவரோட படத்துக்கு விட்டுட மாட்டாங்க. படம் கண்டிப்பாக ரொம்ப நல்லாயிருக்கும்” என்றார் உதயநிதி ஸ்டாலின்.

“இந்தப் படத்துக்கு சித்தார்த் விபின் மியூசிக் பண்ணியிருக்கார். இன்ட்ரோ சாங்குக்கு ஒரு ட்யூன் போட்டார். நான் கேட்டேன், ‘அஜீத், விஜய்லாம் டேட் தரலைங்கிற கோபத்தை எங்கிட்ட காட்டுறியா? இதுலாம் நான் எப்படி ஆடுறது? கொஞ்சம் கீழ வாங்க சித்”ன்னு சொன்னேன். ஸ்ரீநாத் கொஞ்சம் ஏத்தச் சொன்னார். உடனே சித், “ஆடிடுவீங்களா சார்”னு கேட்டார். “ஆடிடுவேன் சித்” என்றேன். மாஸ்டர் ராஜேஷ் கண்ணன் ஆடிக் காண்பிச்சார். எனக்குப் பார்த்ததுக்கே டயர்ட் ஆகிடுச்சு. ஏதாச்சும் ஈசியா ஆட முடியாதான்னு கேட்டேண். இது ஃபாஸ்ட் பீட். இப்படித்தான் ஆடணும்னு சொல்லிட்டார். ஒருவழியா மூச்சு திணறி ரிகர்சல் பண்ணிட்டு வந்தேன். ‘சார் ஆடிட்டீங்களா?’ன்னு சித் கேட்டான். ‘நீ ஆடிடுவியான்னு கேட்டதுக்கு இப்பத்தான் அர்த்தம் புரிஞ்சுது’ன்னு சொன்னேன்” என்றார் சந்தானம். ஆனா நாம் பார்த்து எழுதிட்டா.. நாம் ஒழுங்கா வேலை செய்கிறோம் என ஒருவரின் நம்பிக்கையாவது பெறலாம்!