Shadow

வானவில் வாழ்க்கை ஜனனி

Janani Rajan

“எனது சிறு வயது முதலே இசை மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. 13 வருடமாக கர்நாடக இசை கற்று வருகிறேன். பள்ளி, கல்லூரி காலங்களிலிருந்தே பல இசை நிகழ்ச்சிகள் பாடியுள்ளேன். இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் இசையால்தான். இங்குப் பாடவும் நடிக்கவும் தெரிந்தவர்களே மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று ஜேம்ஸ் சார் ஆரம்பத்திலயே கூறிவிட்டார். பாட மட்டும் அனுமதி கொடுத்த பெற்றோர் முதலில் நடிக்க அனுமதிக்கவே இல்லை. நிறைய பாட்டு வாங்கி நிறைய ஆட்டம் ஆடி வாங்கிய அனுமதி இது. நிச்சயம் நல்ல பெயர் வாங்காமல் விட மாட்டேன்” என்று ராகத்தோடு கூறினார் ஜனனி.