Shadow

விஜய் சேதுபதியின் மெல்லிசை

Mellisai HD

வித்தியாசமான கதைக்களங்களில் ஜொலிக்கும் விஜய் சேதுபதி , சமீபத்தில் தான் கேட்டு வியந்த கதை என்று எல்லோரிடமும் பாராட்டும் ‘மெல்லிசை’ படத்தின் இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி. இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய இவர் இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

‘நவீனமாக்கபட்ட நகர வாழ்வின் சிக்கலைச் சொல்லும் கதை. இந்த நகரத்தை எத்தனை பேர் கவனிக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் இந்த நகரம் ஏதோ வகையில் அனைவரையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.  இந்த நகரத்துக்கு கழுகு கண்கள். இங்கு எல்லோரும் சுவராசியமாக வாழ்கிறோம். ஆனால் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்கிறோமா என்பது தான் இந்த கதையின் கரு’ என்றார் இயக்குநர்.

மேலும், படத்தின் தலைப்பைப் பற்றிப் பேசும் போது, “’மெல்லிசை’ என்பது மேலும் மேலும் கேட்கத் தூண்டும் சுகமான இசை வடிவம். இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் இசை சம்பந்தப்பட்டவர்கள். அதுவே ‘மெல்லிசை’ என விளக்கம் அளித்தார். இசைக்கும், நவீன கதை அமைப்புக்கும் களமாக அமையும் ‘மெல்லிசை’ படத்தின் இசை அமைப்பாளர் சாம் C .S என்னும் அறிமுக இசை அமைப்பாளர் ஆவார். ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், ‘விஜய் சேதுபதி இந்தக் கதையை எதேச்சையாகக் கேட்ட மாத்திரத்தில் கால்ஷீட் தர ஒப்புக் கொண்ட பின் நான் பேசியது தினேஷிடம் தான். அவர் கொடுத்த நம்பிக்கையும் அதன் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பில் காட்டிய வேகமும் பிரமாதம். இப்போதுதான் கதை சொன்ன மாதிரி இருக்கிறது. இதோ படப்பிடிப்பு இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கிறது.

கதாசிரியனைப் போலவே கதையைப் பற்றி தெளிவாகத் தெரிந்து வைத்து இருக்கும் நாயகன் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்துக்கு வேறு எவரையும் சிந்திக்க விடாமல் செய்து இருக்கிறார் என்று படத்தைப் பார்த்து நிச்சயம் சொல்லலாம். ரெபெல் ஸ்டுடியோஸ் சார்பில் தீபன் பூபதி, மற்றும் ரெதேஷ் வேலு தயாரிக்கும் ‘மெல்லிசை’ நிச்சயம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும் படமாக இருக்கும்” என்று கூறுகிறார் இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி.