Shadow

வில்லியாகும் ஷகிலா

உண்மை Unmai movie

பொய், ஊழல், பவர் (அதிகாரம்) தான் மக்களை ஆட்டுவிக்கும் சங்கதிகள்.

நம் நாட்டில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் ஓர் உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு கதையமைத்துள்ளார் இயக்குநர். தான் முற்றிலும் அழித்துக் காட்டுகிறேன் என்று கட்டை விரலை உயர்த்தி சவால் விடும் அரசியல்வாதி பதவிக்கு வந்தபின், தனது வார்த்தைகளை மறந்துவிட்டு அவர்களின் ஆடம்பர வாழ்க்கைக்குச் செய்யும் ‘ஊழல்’தான் உண்மை படத்தின் கதை. ஊழலால் பாமர மக்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை விறுவிறுப்பான ஆக்ஷன் படமாக எடுத்துள்ளனர்.

கேமிராக்கு முன் அசிஸ்டெண்ட் கமிஷ்ணர், கமிஷ்ணரின் தங்கையாக ஒரு திருநங்கை வேடன், மனநிலை பாதிக்கப்பட்டவராக மூன்று வேடமேற்று நடித்துள்ளார் P.ரவிக்குமார். கேமிராக்கு பின் கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என மூன்று வேலைகளையும் அவரே செய்துள்ளார். சென்னைவாசியான ரவிக்குமார் சினிமா கனவுகளில் மும்பைக்குச் சென்று, சாவரியா மற்றும் மூன்று ஹிந்திப் படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். முதல் படத்தை தமிழில் இயக்க வேண்டுமென்ற ஆசையில், மீண்டும் சென்னைக்கு வந்து “மதர் கிரீன்லேண்ட் மூவி மேக்கர்ஸ்” என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். “உண்மை” படம் தொடங்கி சுமார் மூன்றாண்டுகள் ஆகிவிட்டத் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் அடாவடியான எம்.எல்.ஏ.வாக சின்னத்திரை நடிகர் சங்கீதா பாலன் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் ஷகிலா முதன்முறையாக வில்லியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக சுஜிபாலா அறிமுகமாகிறார்.

படத்தின் டைட்டில் போடும் பொழுது, ஒரு கல் கிணற்றில் விழுந்து புதைந்து போகிறது. பின் நீரில் மெல்ல மண்ணை விட்டு எழுந்து உண்மை என்ற எழுத்தாகிறது. உண்மையை ரொம்ப நாள் மறைக்க முடியாது என்ற நீதியும் படத்தில் உள்ளதாம்.

பி.கு.: P.ரவிக்குமாரின் அடுத்த படத்திற்கு, “லவ் பண்ணலாமா வேண்டாமா?” என்ற தலைப்பாம். முதல் படமான உண்மை மக்களுக்காகவும், இரண்டாம் படத்தைக் காதலர்களுக்காகவும் எடுக்கிறாராம்.