Shadow

“விஸ்வரூபம் 200” – கமல் ஸ்பெஷல்

விசாம் அகமது காஷ்மீரி
விஸ்வரூபம் ரூ.200 கோடி வசூல் செய்தது!!
க்றிஸ்டியன் ஃப்ளெட்சர் யூ ரிமெம்பர் ஆளவந்தான்?
ஷிங்கென் நராஷி //யூ ரிமெம்பர் ஆளவந்தான்?//
யூ ரிமெம்பர் வாட் Quentin Tarantino said?
ராகவன் DCP விஸ்வரூபம் கண்டிப்பா ஆஸ்கார் வாங்குது… இது ராகவன்’ஸ் இன்ஸ்டின்க்ட்
பல்ராம் நாயுடு இந்தப் படத்திலு வில்லன் எந்த க்ரூப்பூ? அல்கொய்தாவா? லஷ்கிரி தைபவா? இல்ல அல் உம்மாவா?
தெனாலி எனக்கு படம் எண்டாலும் பயம்.. வில்லன் எண்டாலும் பயம்.. தீவிரவாதம் எண்டாலும் பயம்.. வசூல் எண்டாலும் பயம்.
விஞ்ஞானி கோவிந்த் ராகவன் DCP இந்தப் படத்திற்கு ஆஸ்கார் கிடைக்காதுன்னு சொல்லலை, கிடைச்சா நல்லாயிருக்கும்னுதான் சொல்றேன்.
வசுலீஸ்ட் ராஜாராமன் //வசூல் எண்டாலும் பயம்//
யோவ்.. பாஞ்சாலி. அடிச்சு மூஞ்சு கீய்ஞ்சீலாம் பேத்துருவேன். உன்ன நான் என்னாய்யா பண்ணேன்?
விஸ்வ நாதன் பல்ராம் நாயுடு நானே ஹீரோ.. நானே வில்லன்.
வின்சென்ட் பூவராகவன் என்னன மக்கா? ரெட்டை வேஷமா!? ;))))
விஸ்வ நாதன் அய்யய்யோ.. ஏன் இந்த அய்யம்பேட்டை வேலை!?
சாக்கேத் ராம் //ரெட்டை வேஷமா!?//
‘அதை சிறப்பாக பண்ண.. there is a only man my friend. பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி’ என என் நண்பர் அபயங்கர் சொல்லிண்டிருப்பார்
தெ னாலி எனக்கு ஃபேஸ்புக்னாலும் பயம்.. லைக்னாலும் பயம்.. கமென்ட்னாலும் பயம்.
வேலு நாயக்கர் //இந்தப் படத்திற்கு ஆஸ்கார் கிடைக்காதுன்னு சொல்லலை, கிடைச்சா நல்லாயிருக்கும்னுதான் சொல்றேன்.//
கோவிந்த் நீங்க நல்லவரா கெட்டவரா?
குணா இந்த மனுஷப் பயங்க எல்லாம் கெட்டவங்க. ஒருத்தன் ஒருத்தன சுட்டுக்கிட்டு சாகுற மாதிரியே படம் எடுக்குறாங்க.. அபிராமி.. அபிராமி.
கிருஷ்ண வேனி ஆஸ்காரா!? அதென்ன புது மாதிரி காரா? பெட்ரோலா டீசலா? ஆராவமுதனுக்கு ஒன்னு வாங்கிக் கொடுத்தா ஆஃபீஸ் போயிட்டு வர வசதியா இருக்கும். பாவம் கொழுந்தே வெயிலுல கறுத்துட்டான்.
வசுலீஸ்ட் ராஜாராமன் டேய் குணா.. அழாத. எங்கம்மா கட்டுப்பிடி வைத்தியம்னு ஒன்னு சொல்லிக் கொடுத்திருக்காங்க.
நல்லசிவம் அன்பேசிவம் வசூல் சார்.. மத்தவங்க கஷ்டப்பட்டா உங்களால தாங்க முடியலை இல்ல? அப்ப நீங்களும் கடவுள்.

#ஏன்னா.. நானும் கடவுள் :-)))))

வசுலீஸ்ட் ராஜாராமன் கடவுள் இருக்குன்னு சொல்றவனை நம்பலாம். இல்லன்னு சொல்றவனையும் கூட நம்பலாம். ஆனா உன்ன மாதிரி நான் தான் கடவுள்னு சொல்றான் பார்.. அவனை மட்டும் நம்பவே கூடாது.
மேஜர் ராஜமன்னார் அதுவும் இதுவும் எதுவும் செய்யும் இனிய குணமும் யார்க்குமுண்டோ?
உனக்கேனுமது அமையப்பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான் நீ
அதுபோல் எனக்கும் அமையச் செய்யேன்
ஸ்ரீ வரலக்ஷ்மி நமோஸ்துதே!!
விஞ்ஞானி கோவிந்த் வாட்? கம் அகெயின்!?
பம்மல் சம்பந்தம் பழமொழி சொன்னா அனுபவிக்கனும். சும்மாங்காட்டியும் ஆராயக் கூடாது.
பல்ராம் நாயுடு புரியாத மாதிரி கமென்ட் போட்டா.. இந்த லாத்தி இல்ல லாத்தி அதை பின்னாடி விட்டு அப்படியே கொடை கொடைன்னு கொடைஞ்சா.. எல்லாம் அப்படியே வெளில வந்துடும்.
காமேஷ்வரன் ஓ.. நீங்க பண்றது ரொம்ப அநியாயமாக்கும். பாட்டி இவர் சொல்றதை கேட்டேலோ? பீம் பாய்.. பீம் பாய்.. அந்த லாக்கரில் இருக்கிற ஆறு லட்சத்தை எடுத்து இந்த அவினாசி முகத்துல வீசி எறி.
இந்தியன் சேனாபதி லஞ்சம் வாங்குறதும் தப்பு.. கொடுக்கிறதும் தப்பு.
வேலு நாயக்கர் நாலு பேர் நல்லா இருப்பாங்கன்னா.. எதுவும் தப்பில்ல.
காமேஷ்வரன் ஓ நான் லஞ்சம்னு சொல்லலை. லட்சம்னு தான் சொன்னேனாக்கும். எல்லாம் இந்தப் பாட்டியால் தான் கேட்டியலோ!!
உன்னை போல் ஒருவன் //எனக்கு படம் எண்டாலும் பயம்.. வில்லன் எண்டாலும் பயம்.. தீவிரவாதம் எண்டாலும் பயம். //
தெனாலி இந்தப் பயம் தான் உன்னை மாதிரியும் என்னை மாதிரியுமான காமன் மேனுக்கு மிச்சம். அதனால தான் தீவிரவாத சக்திகள் அப்பாவி பொது மக்களை பலி வாங்குறாங்க.
ஆதி நாராயணன்
உன்னை போல் ஒருவன் – பயம்னா என்ன தெரியுமா? வீரம் இருக்கிற மாதிரி நடிக்க தெரியாதது.
உன்னை போல் ஒருவன் ஆதி பெட்ரோல் விலை தாறுமாறாக ஏறும் பொழுது.. என்னை மாதிரி காமன் மேனால் எப்படி வீரம் இருக்கிற மாதிரி நடிக்க முடியும்?
சக்தி வேல் பால் விலை ஏறுது.. பஸ் கட்டணம் ஏறுது.. பெட்ரோல் விலை ஏறுது.. முடியலை. என்னை விட்டுடுங்க ஐயா. நான் போறேன்.
பல்ராம் நாயுடு
சக்தி வேல் – அவுனா? இப்படிலாம் சோஷியல் நெட்வொர்க்லோ பேசினா பஞ்சாப் சிங்கு கொண்டை ஊசியாலேயே குத்துவாரு. பருவாலயா?
தெனாலி பெட்ரோல் என்றாலும் பயம்.. சிங் என்றாலும் பயம்.. கொண்டை ஊசி என்றாலும் பயம்.
வேலு நாயக்கர் அவங்கள நிறுத்த சொல்லு.. நான் நிறுத்துறேன்.
உன்னை போல் ஒருவன் ஒரு காமன் மேன் நினைச்சா.. எதையும் நிறுத்த வைக்க முடியும்.
சிங்கார வேலன் //அவங்கள நிறுத்த சொல்லு.. நான் நிறுத்துறேன்.//
சொன்னபடி கேளு.. நீ மக்கர் பண்ணாத.
வசுலீஸ்ட் ராஜாராமன் @அஞ்சலி சார்: ஆகா.. உங்களுக்கு ஃபோபியா. ஒன்னியும் கவலைப்படாதீங்க. நான் டாக்டர் எம்.பி.பி.எஸ். இருக்கிற நோய்லாம் தட்டி பட்டிப் பார்த்து டிங்கரிங் பண்ணிடலாம்.
தெனாலி நீங்க டொக்டரோ? எனக்கு முன்ன டொக்டர் மாத்ருபூதம் தான் கண்கண்ட தெய்வம். இனி நீங்களும் என்ட தெய்வம் தான்.
சேனாபதி இந்தியன் //நோய்லாம் தட்டி பட்டிப் பார்த்து டிங்கரிங் பண்ணிடலாம்//
உடம்புக்கு வந்திருக்கிற நோய் விட இப்ப சமுதாயத்திற்கு வந்திருக்கிற நோய் தான் அதிகம். இதை தட்டினால் எல்லாம் சரி வராது. தேவையில்லாத களை எல்லாம் எடுக்கனும்.
விருவிரு மாண்டி மன்னிக்க தெரிஞ்சவன் மனுஷன் மன்னிப்புக் கேட்கிறவன் பெரிய மனுஷன்.
ஆள வந்தான்
ஆஸ்காரை நம்பி படம் எடுத்த பொழுதே
படத்தின் திரைக்கதை சொதப்பிடுமே
மேக்கப்பை நம்பி வேஷம் போடும்பொழுதே
க்ளோஸ்-அப்பில் சாயம் வெளுத்திடுமே
நீ நம்பும் தொழில்நுட்பம் கூட
ஒருநாள் உன்னை கை விடுமே!!
என்றும் கலையை மட்டும் நம்பும் நம்பகம்
எல்லா படத்திற்கும் துணை வருமே!!
ஜார்ஜ் புஷ்
ஆள வந்தான் – விஸ்வரூபம் வில் வின் மெனி 5 ஆஸ்கார்ஸ்.
ஆள வந்தான்
ஆஸ்காருங்கிறது அமெரிக்கப் படங்களுக்கு தர்ற விருதுன்னு இந்த மொட்டை தலையனுக்குத் தெரிஞ்சது இந்த பு***** தெரியலையே!!
விஜய் குமார்
ஸ்டாப் இட் நந்து. இங்க உனக்கென்ன வேலை?
ஆள வந்தான்
பசப்பி பேச்சைக் கேட்டுக்கிட்டு என்னை நிறுத்த சொல்றீயா? அன்னிக்கு தலை விழுந்திருந்தா நான் இதே கேள்வியை உன்னைப் பார்த்துக் கேட்டிருப்பேன்.
ரெட் ரோசஸ் திலீப் //பசப்பி//
எஸ். இந்தப் பொண்ணுங்களே இப்படித் தான். குத்துங்க எஜமான் குத்துங்க.
ராகவன் DCP
திலீப் – ஹேய்.. வாட்ச் அவுட் யுவர் டங். இப்படித் தான் பேச சொல்லிக் கொடுத்தாளா உங்க அ…ம்மா.
சக்தி வேல் போதும். இந்த சண்டைலாம் இதோட போகட்டும். போய்.. எல்லாரும் புள்ளக் குட்டிங்கள படிக்க வைங்க.
களத்தூர் கமல்
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
ஞாபகம் வருகிறதா?
விதை ஒன்று முளைக்கையில்
வெளிப்படும் புதுரூபம்.

விஸ்வரூபம்