Shadow

ஹாலிவுட்டின் காமெடி பேய்கள்

கோஸ்ட்பஸ்டர்ஸ்

பேய்ப் படப் பின்னணியில், நகைச்சுவை ததும்ப ஒன்றன் பின் ஒன்றாகத் திரைப்படங்களை அள்ளி வழங்குவதில் வள்ளலாகி விட்டது தமிழ்ப் பட உலகம் மட்டும் தானா? நாங்களும் அதற்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பது போல், ஹாலிவுட்டும் தற்போது புறப்பட்டு விட்டது.

கோஸ்ட்பஸ்டர்ஸ் படத் தொடரில் மூன்றாவது படமான இதை இயக்கியுள்ளவர் பால் ஃபீக். கேட்டி டிப்போல்டுடன் இணைந்து இதன் திரைக்கதையையும் உருவாக்கி உள்ளார் பால் ஃபீக். மெல்லிசா மெக் கார்த்தி, க்றிஸ்டன் வீக், கேட் மெக்கினோன், லெஸ்லீ ஜோன்ஸ் ஆகியோர், நியூ யார்க் நகரில் பேய் ஒட்டுவதை ஒரு தொழிலாகத் தொடங்குகிறார்கள்!

பேய் ஆராய்ச்சியாளர் அபீ யேட்ஸும், அறிவியல் ஆராய்ச்சியாளரான எரின் கில்பெர்ட்டும் பேய்களும் ஆவிகளும் இருப்பதாக உறுதியாக நம்புகிறார்கள்! ஜில்லியன் ஹோல்ட்ஸ்மேன் என்கிற ஒரு பொறியாளர், அவர்கள் இருவருடன் இணைகிறார். நான்காவது நபராக அவர்களுடன் சேர்ந்து கொள்பவர் பேட்டி டோலன். நியூ யார்க் நகரின் டைம்ஸ் ஸ்கொயரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேய்கள் உலா வர, இந்த நால்வரும் தாக்குதலுக்குத் தயாராகிறார்கள்!

இந்த நால்வர் அணியுடன் இறுதியாக இணைந்து கொள்பவர் கெவின் பெக்மேன். 116 நிமிடங்கள் ஓட்ட நேரம் கொண்ட இப்படம், சுமார், 144 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. தியோடர் ஷப்பேரியோ இசையமைத்துள்ளார். ராபர்ட் யோமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை சோனி பிக்சர்ஸின் உருவாக்கியுள்ளது.