Shadow

100+ ஜப்பான் கலைஞர்கள் இன் ஜம்பு 3டி

Jumbu 3D

அம்புலி 3டி, ஆ ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஹரி – ஹரீஷ் இரட்டை இயக்குநர்கள் இயக்கும் ‘ஜம்புலிங்கம் 3டி’ படத்தில் 100க்கும் மேற்பட்ட ஜப்பானிய நடிகர்களும் நடனக் கலைஞர்களும் படத்தில் நடித்துள்ளனர். “தயாரிப்பாளர் திரு. ஹரி ஜப்பான் கலாச்சார மையத்தின் தலைவராக இருப்பதாலோ என்னவோ இந்தப் படத்தில் பங்கேற்க, ஜப்பானியக் கலைஞர்களின் ஆர்வம் மிக அதிகமாக இருந்தது. ஆர்வம் ஒரு பக்கம் இருப்பினும், அவர்களுடன் எங்களது சம்பாஷனைகள் பெரும்பாலும் ஊமை மொழியில் தான் இருந்தது. அதை படமாக்கி இருந்தாலே, அதுவே ஒரு பெரிய நகைச்சுவைப் படமாக இருந்திருக்கும். இந்தப் படத்தின் கதை ஓர் இந்திய கிராமத்தில் துவங்கி ஜப்பானில் சென்று முடிகிறது.

நமது ஊரில் குழந்தைகளுகான படங்களே வெளி வருவதில்லை என்ற குறையை ஜம்புலிங்கம் 3டி தீர்க்கும். இந்தப் படத்தை திரையிடத் திரையரங்கு உரிமையாளர்கள் இடையே இருக்கும் ஆர்வம், இந்தக் கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கு நல்ல பொழுதுபோக்கைத் தர வேண்டுமென்ற அவர்களது எண்ணத்தையும் காட்டுகிறது. 3டி தொழில் நுட்பம், இருக்கிறதே என்று எல்லா கதைக்கும் பயன்படுத்த முடியாது. அதற்கேற்ற கதை வேண்டும். ஜம்புலிங்கம் 3டி படத்தில் அதற்குத் தேவையான அத்தனை அம்சங்களும் நிறைய பெற்று இருக்கிறது’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

இப்படம், குழந்தைகளைக் கவருமென பெரும் நம்பிக்கையில் உள்லனர் படக்குழுவினர்.