Shadow

36 முத்தங்களின் பின்னணி.!

G.V.Prakash

டீஸர் வெளியான பின், ஒரே ஒரு முத்தக் காட்சிக்கு 36 டேக்குகள் வாங்கினாராம் ஜி.வி.பிரகாஷ் குமார் எனச் சொல்லப்பட்டது. “டீஸரைப் பார்த்துட்டு அனைவரும் கேட்டது, ‘ஏன் ஒரு நல்ல பையனை இப்படியாக்கி வச்சிருக்கீங்க?’ என்பதுதான். நான் ஒன்னும் செய்யலை. அவரது இயல்பே அப்படித்தான். வெளில யாருக்கும் அது தெரில. சொன்னாலும் நம்ப மாட்டேங்கிறாங்க.

இப்ப இருக்கிற லவ்வுன்னா என்ன? அதை எந்தக் கட்டுப்பாடும் இல்லாம தனது ஃப்ரீ ஜோனில் இருந்து நடிச்சிருக்கார் ஜி.வி. இது முழுக்க முழுக்க பசங்களுக்கான படம். ஒவ்வொரு பொண்ணும், பையனும் படத்தோட தன்னைப் பொருத்திப் பார்த்துப்பாங்க. படத்தின் முதல் பாதி எழுதி முடிச்சதுமே, இவர்தான் நடிக்கணும்னு முடிவு பண்ணிக் கேட்டேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, அப்போ பென்சில் டார்லிங் படம்லாம் ஸ்டார்ட் பணவே இல்லை. ‘என்னடா சொல்றா நீ?’ன்னு கேட்டார். அப்புறம் அவரது டார்லிங் படமும் ரிலீஸ் ஆகிடுச்சு. ‘என்ன நாம படம் பண்றமா இல்லையா?’ன்னு கேட்டார்.

நான் கிட்டத்தட்ட 38 தயாரிப்பாளரைப் போய் பார்த்தேன். கடைசியா என்னையும், என் கதையையும் நம்பி ஓகே பண்ணது C.J.ஜெயகுமார் சார்தான். கதையைக் கேட்டுட்டு, என்னை 10 பேரிடம் அனுப்பினார். காலையில் ஒரு ஷிஃப்ட்; மதியம் ஒரு ஷிஃப்ட் என அவங்கக கதையைக் கேட்டு மார்க்லாம் போட்டு பாஸ் பண்ணி விடாங்க. பத்துக்கு எட்டு; பத்துக்கு ஒன்பதென நான் வாங்கிய மார்க்ஸைக் ஆன்ஸர் ஷீட்டில் காட்டினார். ஜி.வி.பிரகாஷின் ஒரே பெயரை வச்சு படத்தை ஆரம்பிச்சோம். இப்போ இவ்ளோ பெரிய படம் வந்திருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார் இயக்குநர் ஆதிக்.

“லிப்-லாக் சீனுக்கு 36 ஷாட்டெல்லாம் எடுக்கவே இல்லை. 4 கோணத்தில் எடுத்தோம். அவ்ளோதான்! ஆதிக் இண்டர்வியூவில், 36 டேக் போயிடுச்சுன்னு சொல்லிட்டார். அவர் வேணும்னே இபப்டிச் சொல்லி ஊதி பெருசு பண்ணிட்டார். ஏன் இப்படின்னு கேட்டா, ‘கான்ட்ரவர்ஸி பத்தலை’ன்னு சொல்றான் ஆதிக்” என்றார் ஜி.வி.

“36 டேக்குகள் போனது உண்மை. நார்மலா ரெண்டு பேர் கிஸ் பண்ணா அவ்ளோ டேக்ஸ் போகுது. ஆனா அந்த சீனோட கோரியோ அப்படி. ஹீரோயினோட பாட்டி பின்னாடி போகணும்; போஸ்ட் மேன் உள்ள வரணும்; இரண்டு பேரும் கிஸ் பண்ணணும். இது கண்ட்டினியூவஸ் ஷாட்டா எடுத்து முடிக்கணும்னு, 36 தடவை எடுத்துட்டு இருந்தோம். எடுத்து முடிச்சிட்டு, ஒருவழியா நானே கன்வின்ஸ் ஆயிட்டன். பின்னாடி என்னைத் தட்டி, “இல்ல இன்னொரு டேக் போலாம்” என குரல் கேட்டுச்சு. திரும்பிப் பார்த்தா எங்கப்பா. வீட்டில் இது போல் சிண் வந்தாலே, சேனலை மாத்திடுவோம். ஆஹா.. அப்பாவை வச்சுட்டு என்ன சீன் எடுக்கிறோம் என திக்கென ஆயிடுச்சு” எனச் சிரித்தார் இயக்குநர் ஆதிக்.

(இயக்குநர் ஆதிக்கும் அவரது தந்தையும் ஒரு பாடல் வெளியீட்டிற்கு சத்யம் திரையரங்கிற்கு வந்துள்ளனர். உட்கார இடம் கிடைக்காததால் வெளியேறியுள்ளனர். தனது படத்திற்கான பாடல் வெளியீட்டு விழாவை சத்யமில்தான் வைக்க வேண்டுமென அன்று முடிவெடுத்துள்ளார் ஆதிக்.

ஜூலை 6, 2015 அன்று காலை சத்யம் திரையரங்கில், த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் ட்ரைலரை இயக்குநர் முருகதாஸ் வெளியிட இயக்குநர் ஆதிக்கின் தந்தை ரவி கந்தசாமி பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.)