பிரச்சார கூட்டத்தில் திடீரென அமைச்சரை கட்டிப்பிடித்த பெண்.. கண்கலங்கிய அமைச்சர்!!
ராயபுரம் தொகுதியில் ஏழாவது முறையாக அமைச்சர் ஜெயக்குமார் தேர்தலை சந்திக்கிறார்.ஏற்கனவே நடந்து முடிந்த ஆறு தேர்தலில் ஐந்து முறை அதே தொகுதியில் வெற்றி பெற்று மக்களின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் காலை தொடங்கி இரவு வரையிலும் வீதி தோறும், வீடுகள் தோறும் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.நேற்று பஜனை தெருவில் அவர் பிரச்சாரத்திற்காக வந்தபோது உள்ள கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பெண்மணி அவர் அருகே வந்து அவள் கையை பிடித்து, "எங்க தெய்வம் நீதானய்யா நீதானய்யா கொரோனா காலத்துல எல்லா உதவியும் செஞ்சு எங்கள காப்பாத்துன தெய்வம் நீ தான நீ ஜெயிக்கணும்ய்யா என்று சொல்லி ஜெயக்குமாரின் கைகளை பற்றிக் கொண்டார்.
அங்கிருந்த அனைவரும் இந்த காட்சியை பார்த்து உறைந்து போனார்கள் அத்தோடு நிறுத்திக் கொள்ளாத அந்தப் பெ...