Search

பிக் பாஸ் 3: நாள் 42 – “மகனே கமல்!”

Bigg-boss-3---day-42

சம்பிரதாயத்துக்கு வீட்டுக்குள்ளே இரண்டு ஷாட் காண்பித்தனர். கோட் சூட்டில் ஆண்டவர் வருகைத் தந்தார். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ எனச் சொல்லி வகுப்பெடுத்தார். நமக்கு வர பிரச்சினைக்கு நம்முடைய செயல்கள் தான் காரணமென வீட்டுக்குள் இருக்கிறவர்களைச் சுட்டிக் காட்டிப் பேசினார்.

இந்த வார டாஸ்கில் எல்லோரும் நடிகர் / நடிகை வேஷம் போட்டனர் இல்லையா? அதே கேரக்டரில் கமலிடம் கேள்வி கேட்கனுமென ஒரு விளையாட்டு. நன்றாகவே இருந்தது.

சரவணனே ஆரம்பித்தார். ‘நடிகர் சங்கத்தில் நீங்க பொறுப்பெடுத்துக்கலாமே! ஏன் செய்யலை?’ என விஜயகாந்த் கேரக்டரில் கேள்வி கேட்டார்.

“நான் பின்னாடி இருந்து ஆக்‌ஷன், கட்லாம் சொல்லிட்டுத்தான் இருக்கேன். நடிகர் சங்கமா இருந்தாலும் அங்க நான் தான் டைரக்டர்” எனச் சொன்னார். இதுக்கு சினிமா உலகம் என்ன சொல்லப்போகுதென வெயிட் பண்ணிப் பார்க்கவேண்டும்.

சிம்பு கேள்விக்குப் பங்கமாகக் கலாய்த்து, பதில் சொன்னது அல்டிமேட் கமல் ஸ்டைல். ‘சிம்பு ட்ராக் ரிவர்ஸ்ல போய்ட்டு இருக்கு’ என்பதை சிம்பாலிக்காகச் சொன்னார்.

அபிநயம் பிடித்துக் கொண்டே காதலைப் பற்றி ஒரு கேள்வி கேட்டார் அபிராமி. நாம் ஒரு கேள்வி கேட்டால், நாம் அசந்து போகின்ற மாதிரி ஒரு பதில் சொல்வாங்க இல்லையா? அப்படி டீல் பண்ணினார் கமல். 10 தலை இராவணனுக்கு இருந்ததும் ஒரு தலைக் காதல் தானெனச் (எம் ஏ ஃபிலாசபி, ஃபிலாசபி) சொல்லிவிட்டு ஆடியன்ஸைத் திரும்பிப் பார்த்தார். கைதட்டல் கொஞ்சம் டைமிங் மிஸ். அப்புறம் பதில் சொல்லி முடித்துவிட்சு அபிராமியைப் பார்த்துப் “புரிஞ்சுதா?” எனக் கேட்டார்.

இப்படியே ஒவ்வொருத்தராகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தனர். பதில் சொல்றதுக்கு கமலுக்குச் சொல்லித் தரவேண்டுமா என்ன?

“நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சதுல உங்களுக்குப் பிடிச்ச படம் எது?” எனக் கேட்டார் குஷ்பு கேரக்டரில் இருந்த ஷெரின்.

மைக்கேல் மதனகாமராஜன் படத்தைக் குறிப்பிட்டுச் சொன்ன கமல், “அதில் அசிஸ்டன்ட் டைரக்டர் மாதிரி என் கூட வேலை பார்த்தாங்க” எனச் சொல்லிப் பாராட்டினார்.

அடுத்து திரிஷாவின் கேள்வி. மன்மதன் அம்பு படத்தில், ‘நீ நீல வானம்’ பாடல் பற்றிக் கேள்வி கேட்டார். “அப்ப நீங்க இன்னும் லவ் மோட்லேயே தான் இருக்கீங்க?” எனக் கேட்டுவிட்டு, “நான் திரிஷாவைத் தான் கேட்டேன். நீங்க லாஸ்லியான்னு நினைச்சுட்டீங்களா?” என டைமிங்கில் காமெடி செய்தார்.

மதுமிதா, “தம்பி கமல்” எனக் கூப்பிட, “சரோஜா தேவி என்னை மகனே என்று தான் கூப்பிடுவாங்க” எனத் திருத்தினார்.

இந்த செஷன் முடிந்த உடனே ரோல் ப்ளே கேம் தொடங்கியது. இரண்டு இரண்டு பேராகப் பிரிந்து, உட்கார்ந்து ஒருத்தர் மாதிரி இன்னொருத்தர் பதில் சொல்லவேண்டும்.

முதலில் தர்ஷனும் முகினும். இரண்டு பேரும் மாறி மாறி கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டனர். ‘என் குடும்பத்தை அவன் கேவலப்படுத்தறதும், அவன் குடும்பத்தை நான் கேவலப்படுத்தறதும் எங்களுக்குள்ள ஒரு விளையாட்டுடா!’ மொமன்ட். இருந்தாலும், ‘நீங்க எடுப்பார் கைப்பிள்ளையா?’ கேள்விக்கு முகின் மாதிரியே பதில் சொன்னார் தர்ஷன். இதில் ஷெரின் பற்றிய கேள்விக்கு முகின் கொடுத்த பதிலைக் கேட்டு, ஷெரின் பயங்கரமாக வெட்கப்பட்டார்.

சாக்‌ஷி – சாண்டி, மது – சரவணன், அபி – சேரன், லாஸ் – ஷெரின், கவின் – ரேஷ்மா ஆகியோர் ஜோடிகள்.

இதில் லாஸ் மாதிரி ஷெரின் பேசியது ஆசம். கமல் சொன்ன உடனே, லாஸ் மாதிரியே ஓம் எனச் சொன்னது செம்ம டைமிங். கமலும் ஆச்சரிய ரியாக்ஷன் கொடுத்தார்.

அடுத்து எவிக்சன் ப்ராசஸ். இரண்டு கைவிலங்கை எடுத்து நான்கு பேருக்கும் மாட்டி விட்டுவிட்டு, சாவி வீட்டில் தான் இருக்கு தேடுங்க எனச் சொல்லிவிட்டார். கடைசியில் க்ளூ கொடுத்து தான் அதையும் கண்டுபிடித்தனர். அதில் ‘கவின் சேவ்’ எனச் சொல்ல, மகளிர் அணி தான் மிச்சம் இருந்தது.

சாக்‌ஷி, ‘நான் வீட்டுக்கு போறேன்’ என அடம்பிடிக்க, “அப்படியெல்லாம் அனுப்ப முடியாது” என ரேஷ்மா பேரை கூப்பிட்டார்.

இந்த வாரம் முழுவதும் பயந்து கொண்டே இருந்த ரேஷ்மா நேற்று பெரிதாக அழவில்லை. மனதளவில் தயாராக இருந்தார். முகின் தான் அழுது கொண்டே இருந்தார். ஏனெனில் அவரும் நாமினேஷன் செய்திருந்தார்.

ஒரு வழியாக விடை பெற்று வெளியே வந்த ரேஷ்மா, குடும்ப வன்முறைகளுக்கு ஆளான பெண்களுக்கு மெசேஜ் சொன்னார். குறும்படம் பார்த்துவிட்டு, மற்ற ஹவுஸ்மேட்ஸுக்கு டாட்டா காட்டிவிட்டுக் கிளம்பிட்டார்.

ரோல் ப்ளே டாஸ்கில் கேட்கப்பட்டது எல்லாமே விவகாரமான கேள்விகள் தான். பதில் சொன்னவர்களும் ஓரளவுக்கு சரியாகத்தான் சொன்னார்கள். ஆனால் வரும் வாரத்தில், இது ஒரு பிரச்சினையாக வாய்ப்பிருக்கு. “சோறு இல்லேன்னு நான்தான்டா சொல்லுவேன், நீ எப்படிடா சொல்லலாம்” ரேஞில் தான் இந்தப் பிரச்சினை வெடிக்கும். சில பேர் இதை பர்சனலாக எடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கு. குறிப்பாக அபிராமி.

மகாதேவன் CM