இது புதிதுமீசைய முறுக்கு 2 விமர்சனம் | Meesaya murukku review
மகன், தந்தை, தாத்தா என மூன்று தலைமுறை கானா கலைஞர்கள் பற்றிய கதையிது. 1979 இல் ஒரு புறக்கணிப்பில் தொடங்கும் படம், 2026 இல் கிடைக்கப்பெறும் அங்கீகாரத்துடன் படம் நிறைவுறுகிறது. வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்டு, ஒரு கலைஞனாய் தனக்கு விருப்பமானதைச் செய்வதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் படம் அழுத்தமாகப் பேசியுள்ளது. கானா தாஸ், டைகர் சிவா, DJ ஜீவா என மூன்று பாத்திரங்களில் தோன்றியுள்ளார் ஹிப்ஹாப் ஆதி. நடிப்பால் வித்தியாசம் காட்டாமல், சிகை அலங்கார மாற்றத்தோடு நிறுத்திக் கொண்டுள்ளார். […]














