Shadow

கதை

கர்ணன் சிறந்த நண்பனா?

கர்ணன் சிறந்த நண்பனா?

ஆன்‌மிகம், கதை
கர்ணன் கொடையாளியா? மைத்தடங்கண் மாதேவி வார்துகிலை யான்பிடிக்க அற்று விழுந்த அருமணிகள் - மற்றவற்றைக் கோக்கேனோ என்றுரைத்த கொற்றவர்க் கென்னாருயிரைப் போக்கேனோ வெஞ்சமத்துப் புக்கு என்று பாரத வெண்பாவில் வருகிறது. இது பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவர் எழுதிய நூல். வில்லி புத்தூராரும், 'மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு அறத் திகழும் ஏகாந்த இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, "எடுக்கவோ? கோக்கவோ?'" என்றான்; திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனைச் சென்று, செஞ்சோற்றுக் கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும், தருமமும்!' என்றான். என எழுதியுள்ளார். இதில் யார் முதல் என்று தெரியவில்லை. அதாவது துரியோதனன் மனைவி கர்ணனுடன் சொக்கட்டான் விளையாடுகிறாள். அப்போது துரியோதனன் உள்ளே வருகிறான். அவன் வருவது கர்ணனின் பின் பக்கம், அவள் பார்த்து எழுந்துவிட, கர்ணன் தோல்வியி...
தங்க ஒரு… – கிருஷ்ணன் நம்பி

தங்க ஒரு… – கிருஷ்ணன் நம்பி

கதை, படைப்புகள்
அன்புள்ள செல்லா, உன் கடிதம் கிடைத்தது. என்ன செய்யச் சொல்லுகிறாய்? முயற்சியில் ஒன்றும் குறையில்லைknambi . ஒவ்வொரு நாள் மாலையும், மந்தைவெளி, புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம் என்று வேகமாக அலையத்தான் செய்கிறேன். மோட்டார்காரனுக்குக் காசு கொடுத்துக் கட்டி வராது என்று விளக்கெண்ணை வேறு வாங்கி வைத்திருக்கிறேன் காலில் போட்டுத் தேக்க. என் காலைப் பிடித்துவிட நீயும் இங்கு உடனே வர வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால் என்ன செய்யச் சொல்லுகிறாய், செல்லா, முப்பது ரூபாய்க்கு மேல் போகவும் கூடாது. அதுவே நம் சக்திக்கு மீறியதுதான். போனால் போகிறது என்று கொடுக்கத் தயாராக இருந்தாலும்கூடக் கிடைக்க மாட்டேன் என்கிறதே. நேற்று நடந்த அந்தச் சம்பவம், அந்தக் காட்சி, அதை நீ பார்த்திருக்க வேண்டுமே செல்லா, தேனாம்பேட்டையில்… தேனாம்பேட்டை பக்கம்தான் போய்க்கொண்டிருந்தேன்.. ஒரு சந்து. குப்பையும், சேறும் சாக்கடையும், பன்றிக் கூட்டமும்...
கத்தரிக்காய்க் கல்யாணம் (சிறார் கதை)

கத்தரிக்காய்க் கல்யாணம் (சிறார் கதை)

கதை
அன்று விடிவதற்கு முன்னரே ஊரே கோலாகலமாக இருந்தது. சாரை சாரையாய் வெண்டைக்காய்கள், பாகற்காய்கள், முருங்கைக்காய்கள் என அனைத்து வகை காய்கறிகளும் ஊரின் பொதுவில் இருந்த மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அனைவரும் புத்தாடையுடன் ஜொலிக்கும் ஆபரணங்களுடன் பேசிச் சிரித்துக் கொண்டும், ஆடிப் பாடிக்கொண்டும் நடந்தும், வண்டியிலுமாக வந்த வண்ணம் இருந்தனர். அந்த ஊருக்கு அப்போதுதான் குடிவந்திருந்த பச்சை மிளகாய்க் குடும்பத்தினர் 'ஆ'வென வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஆர்வம் தாங்க முடியாத பச்சை மிளகாய்ப் பெரியவர் ஒருவர் வழியில் வேகமாகச் சென்று கொண்டிருந்த பீர்க்கங்காயை நிறுத்தி, "என்ன விசேஷம்?" என்று வினவ, பச்சை மிளகாயை ஏற இறங்கப் பார்த்த பீர்க்கையார், "ஊருக்குப் புதுசா நீங்க? இன்னிக்குக் கத்தரிக்காய் வீட்டுல கல்யாணம்! ஊரே கொண்டாட்டமா இருக்கும். நீங்களும் சீக்கிரம் குளிச்சிட்டுத் தயாராகுங்க! இன...
சுதந்திர தினம் (சிறுகதை) – கிருஷ்ணன் நம்பி

சுதந்திர தினம் (சிறுகதை) – கிருஷ்ணன் நம்பி

கதை, புத்தகம்
“ஒரு கொடி செஞ்சு கொடு, அண்ணாச்சி.” “என்ன கொடி கேக்கிறே” அலுப்புடன் முகத்தைத் திருப்பிக் கேட்கிறான் பாண்டியன். ஓடிப்போய்த் தன் மூன்றாம் பாடப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வருகிறான் கருப்பையா. ஒரு பக்கத்தைத் தன் அண்ணனிடம் நீட்டிக் காட்டுகிறான். தேசக் கொடி என்று தலைப்பு; வர்ணம் எதுவும் இல்லாமலே காகிதத்தின் வெண்மையிலும், அச்சு மையின் கருமையிலும் ‘மூவர்ண’க் கொடியின் படம் அந்தப் பக்கத்தில் இருக்கிறது. “இந்தக் கொடி செஞ்சுகொடு, அண்ணாச்சி. நாளைக்கு இஸ்கூலுக்குக் கொண்டுக்கிட்டுப் போகணும். நாளைக்கு எல்லாரும் கொண்டுக்கிட்டுப் போகணும்” என்று சொல்லுகிறான் கருப்பையா. அவன் முகத்தில் களிப்பும் ஆர்வமும் மின்னுகின்றன. இருபக்கமும் கூராக்கப்பட்டிருக்கும் மஞ்சள் நிறத் துண்டுப் பென்சில் ஒன்றினால் சுவரில் உழவு நடவுக் கணக்குக் குறித்துக் கொண்டிருக்கும் பாண்டியன், “இரு, வாறேன்” என்று மேலும் சிறிது நேரம் சில எண்க...
அவள் பெயர் அபிராமி – 2

அவள் பெயர் அபிராமி – 2

கதை, தொடர்
முடிவு செய்து வைத்தபடியே கதிரேசு வீட்டிற்குள் வந்ததும் வராததுமாய் ஆரம்பித்து வைத்தாள் ராமாயி. "எலே கதிரேசு! அகிலாண்டேஸ்வரிக்கு வயசாயிகிட்டே போகுது! சீக்கிரமா ஒரு கண்ணாலத்தைப் பண்ணிப் பாக்கோணும்னு இல்லாம இப்படிக் கிணத்துல போட்ட கல்லு கணக்கா இருந்தா எப்படி?" தாழியில் இருந்த தண்ணீரை இரு கைகளால் அள்ளி முகம் கழுவிக் கொண்டிருந்த கதிரேசு நிமிர்ந்து ராமாயியை ஒரு கணம் கூர்ந்து நோக்கினான். "ஆத்தா! இப்ப அவளுக்கு என்ன வயசாயிட்டு! இப்பதானே பன்னெண்டாப்புப் போறா! கண்ணால பேச்செடுத்தா கலெக்ட்டர் வரைக்கும் வந்து நிப்பானுக! கம்பிதான் எண்ணனும்!" "போடா! போக்கத்த பயலுவ! அவனுகளுக்கென்ன தெரியும் பொம்பள புள்ளய பெத்து வெச்சிருக்குறவனோட கஷ்டம்! நம்ம பொண்ணுக்கு எதையெதை எப்ப பண்ணனும்னு நமக்குத் தெரியாதா?" "அப்பாத்தா! சித்தப்பூவை உள்ள தள்ளாம விட மாட்டே போல" கேலியாகச் சிரித்துக் கொண்டே கேட்டான் சுப்ரமணி. வெளித் தி...
அவள் பெயர் அபிராமி – 1

அவள் பெயர் அபிராமி – 1

கதை, தொடர்
"ஏய் அகிலாண்டேஸ்வரீ.. இன்னும் என்னடீ பண்றவ, நேரங்காலமா இஸ்கூலுக்குப் போய்ச்சேர வேண்டாமா? ஊஞ்சிநேதக்காரி வந்துட்டா பாரு.." வெளியில் இருந்து கத்திய அப்பாத்தாவின் குரலைப் பொருட்படுத்தாது தனது முகத்தில் அப்பிய அதிகப்படியான பவுடரை ரசம் தேய்ந்த கண்ணாடியில் பார்த்துச் சரி செய்து கொண்டிருந்தாள். மடித்து ரிப்பன் கட்டியிருந்த ரெட்டை ஜடைகளை இணைக்கும் விதமாய்க் குண்டுமல்லிச் சரமொன்றைத் தொடுத்திருந்தாள்.  அகிலாண்டேஸ்வரி என்றழைக்கப்பட்ட அகிலா அந்த வீட்டின் ஒரே பெண் வாரிசு. பெரியப்பா கண்ணைய்யனுக்கு இரண்டு ஆண் வாரிசுகள். சித்தப்பா செல்வராசுவிற்கு மூன்று ஆண் வாரிசுகள். கண்ணைய்யனுக்கும் பெண் வாரிசு வேண்டுமென்ற ஆசை இருந்தாலும் இரண்டோடு நிறுத்திக் கொண்டார். செல்வராசுவின் விடா முயற்சியும் பலனளிக்கவில்லை. பதினாறு வயசு அகிலாவிற்கு இரண்டரை வயதில் தம்பி. பெரியப்பாவிற்கும் சித்தப்பாவிற்கும் அகிலா அப்படியொரு செல்...
நிவேதா

நிவேதா

கதை, படைப்புகள்
ஒரு மாலைப் பொழுது. வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்தாள் நிவேதா. அவளுக்கு 21 வயது. மாநிறமாய் இருந்தாலும் பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். பழைய டிவிஎஸ் 50இல் மிகவும் நிதானமாக, பொறுமையாக வாகனத்தை இயக்கும் பழக்கம் கொண்டவள். அன்றைக்கும் அதே நிதானமான வேகத்துடன் வீடு திரும்பிக் கொண்டு இருந்தாள். வழியில் தோழியைச் சந்தித்து சிறிது நேரம் பரஸ்பரம் பேசி மகிழ்ந்து விட்டு, ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாள். மொத்தமும் இரு அறைகளே கொண்ட எளிமையான வீடு. ஏழ்மையான வீடும் கூட. அவளுடைய குடும்பம் அழகான அளவான குடும்பம். அம்மா,அப்பா மற்றும் தம்பி. இவர்கள் தான் இவளின் உலகம். குடும்பத்தின் மீது அளவற்ற பாசமும், அக்கறையும் கொண்டவள். அவர்களுக்கு இவள்தான் உலகம் என்று சொல்ல முடியாது. இவளது தம்பி தான் அவர்களின் உலகம். தம்பி இவளை விட 6 வயது சிறியவன். ஏனோ பெற்றோருக்கு இவளை விட, செல்லக் குழந்தையான தம்பியின் மீது பற்று ...
அட ஆண்டவா!! இது உண்மையா? அப்படின்னா..!!?

அட ஆண்டவா!! இது உண்மையா? அப்படின்னா..!!?

கதை, நம்பினால் நம்புங்கள், படைப்புகள்
‘ஆர்வக் கோளாறில் இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே! இப்போது இங்கிருந்து எப்படி வெளியே போவது?’ என்று தெரியாத பதட்டத்தில் அல்லாடிக் கொண்டிருந்தான் வெங்கடேஷ். சுமாவிற்கு மட்டும் இது தெரிந்தால் அவ்வளவு தான்! நேரம் வேறு ஓடிக் கொண்டிருந்தது. வெங்கட் என்ற வெங்கடேஷ் ஃபோட்டோ எடுப்பதில் அதீத ஆர்வம் கொண்டவன். காமெரா என்பது ஒரு சாதனமே. நம் பார்வையில் தெரியும் காட்சிகளை மிக அழகான கோணத்தில் படமாக்குவதுதான் கலை என்று பாலுமகேந்திரா எப்போதோ ஒரு பேட்டியில் சொன்னதை வேதவாக்காகக் கொண்டு சதாசர்வகாலமும் அழகான காட்சிகளைத் தேடி காமெராவும் கையுமாகவே திரிபவன். பனிப்புயலின் புண்ணியத்தால் நியூயார்க் நகரம் முழுவதும் வெண்பனிக் குவியலால் உறைந்திருந்தது. வழக்கமாய் படம் எடுக்கும் ஏரியைச் சுற்றி வந்த போது அவனுக்கு ஏற்பட்ட விசித்திரமான உந்துதலில் மரங்கள் சூழ்ந்த அமைதியான கல்லறையில் படம் எடுக்கலாம் என தீர்மானித்துக் கல்லறை தோட...
சிங்கமுக ஆசிரியர்

சிங்கமுக ஆசிரியர்

கதை, படைப்புகள்
ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாண மண்ணில் தொடங்கிய நான் சில சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்து நாவலப்பிட்டி எனும் ஊருக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தேன். அங்கே அடுத்த வகுப்பினில் ஓராண்டு படித்தேன். பின் தந்தையின் வேலை மாற்றத்தால் எட்டியாற்தோட்டை எனும் ஊருக்குச் சென்றோம். அங்குள்ள தமிழ்ப் பாடசாலையில் அடுத்த இரண்டாண்டுகள் படித்தேன். மீண்டும் மாற்றலான தந்தையைப் பின்தொடர்ந்த நாங்கள் இரத்தினபுரி என்ற நகரில் சுமார் ஆறாண்டுகள் வாசம் செய்தோம்.இரத்தினபுரி தமிழ் மத்திய மகா வித்தியாலத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரம் வரை பயின்று அதில் சித்தியும் பெற்றதோடு ஆசிரியர்களின் செல்லப்பிள்ளையாகவும் திகழ்ந்தேன். அந்தப் பாடசாலையில் ஸ்திரமாக எனது பெயரை, கல்வி மற்றும் பிற துறைகளில் நிலை நாட்டினேன். கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தையும் அங்கே தொடரலாம் என்ற என் கனவு பொய்யானது.தந்தை மீண்டும் மாற்றலுக்குத் தயா...
ஜொள்ளன்

ஜொள்ளன்

கதை, படைப்புகள்
மு.கு.: நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்களுக்காக எழுதப்பட்ட கதை.'இன்னிக்கு தான் அவனுங்களுக்கு கடைசி எக்ஜாமாம். சீனுவ தவிர மத்த பயலுவலாம் ஊருக்குப் போயிடுவானுங்க. ஜொள்ளனும் தூக்கணாம்பாளையத்தில் இருக்கிற அவன் மாமா வீட்டுக்குப் போயிட்டான். வர நாலஞ்சு நாள் பிடிக்கும். எல்லோரும் சேர்ந்து என்னைத் திண்ணையில தனியா உட்கார்ந்து புலம்ப விட்ருவானுங்க போல' என்று திண்ணையில் கால் நீட்டி சுவரோடு சாய்ந்துக் கொண்டார்.திண்ணையை ஒட்டிய சாளரம் வழியாக உள்ளே பார்த்தார். அவர் மனைவி சாளரத்திற்கு முதுகைக் காட்டியது போல் கட்டில் மேல் ஒருக்களித்து படுத்துக் கொண்டிருந்தார்."தூங்கிட்டியா?""இல்ல. ஏன்?""உள்ள புழுங்கல? திண்ணைக்கு வாயேன். பேசிட்டிருப்போம்.""இப்ப அது மட்டுந்தான் குறைச்சல். உங்க கூட சேர்ந்து திண்ணைய தேய்க்க ஆள் யாரும் இன்னிக்கு...
அடையாளங்கள்

அடையாளங்கள்

கதை, படைப்புகள்
'ஊர சுத்தி ஒரே கடன்..எல்லாம் கழுத்த நெறிக்க ஆரம்பிச்சிட்டாங்கா!''எதிர் வீட்ல கார் வாங்கிட்டாங்க..பக்கத்து வீட்ல மோர் வாங்கிட்டாங்கன்னு பொன்டாட்டி ஒரே தொனதொனப்பு.' 'மனுஷன் ரொம்ப மாறிட்டான் சார்..விலைவாசி எல்லாம் ரொம்ப ஏறிப் போச்சு..சமாளிக்க முடியல.'இவையாவும் என் பொழுதுப்போக்கின் போது பொதுவாக காதில் விழுபவைகள். முகத்தில் ஒரு பொய்யான ஆர்வத்தோடு இவை அனைத்தையும் கேட்பேன். ஆனால் இதையெல்லாம் நினைத்து பிறகு சிரிப்பேன்.எனது பொழுதுப்போக்கு தெருவில் வித்தியாசமாக போவோரை உரிமையோடு அழைத்து ஒரு வேளை உணவு வாங்கி தருவது. கைகளில் கிழிந்த சாக்குடன், சுருள் சுருளாக அழுக்கு தலை முடியோடு, தனியாக பேசியவாறு செல்வோரை எல்லாம் அணுகி இல்லாத பணிவினை வரவழைத்துக் கொண்டு பவ்யமாக அழைப்பேன். அவர்கள் அனைவரும் என்னை பேயை பார்ப்பது போல் பார்த்து விட்டு, மிக்க யோசனைக்கு பிறகு என்னுடன் அருகிலிருக்கும் உணவகத்திற்கு வ...
அந்தி நேர சாயை – 3

அந்தி நேர சாயை – 3

கதை, படைப்புகள்
அந்தி நேர சாயை - 2என் பெயர் சுதன். பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இந்த ஊர்ல தான். நான், எங்கம்மா.. இவ்ளோ தான் என் உலகம். ஆனா உலகம் ரொம்ப பெருசு இல்ல!! அப்ப என்னோட அழகான சின்னக் கூடுன்னு சொல்லிக்கலாம் தான? இந்தக் கூட்டுல யாரோ கல் எறிஞ்ச மாதிரி எங்கம்மாக்கு கிட்னி ஃபெய்லியர் ஆயிடுச்சு. அவங்க காலுலாம் வீங்க ஆரம்பிச்சுது. பெருசா அவங்க கண்டுக்கல. நாள் ஆக ஆக சோர்வு அதிகமாயி உடம்புக்கு முடியாம படுத்துக்கிட்டே இருந்தாங்க. உள்ளூர் வைத்தியர் மருந்துக்கு சரி படல. ஏழு கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்கு போனோம். ஒரு கிட்னி சுத்தமா செயலிழந்துடுச்சுன்னும், இன்னொன்னு பலவீனமா இருக்குன்னு கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி டாக்டர் டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்துட்டு சொன்னாரு. உடனே தனியார் ஆஸ்பத்திரில சேர்த்தோம். பலவீனமா இருக்கிற கிட்னி கொஞ்ச நாள் தான் தாங்கும் என சொல்லிட்டாங்க. எவ்ளோ சீக்கிரம் முட...
அந்தி நேர சாயை – 2

அந்தி நேர சாயை – 2

கதை, படைப்புகள்
அந்தி நேர சாயை - 1முதல்ல இந்த ஊருக்கு வெளியில் இருக்கிற பெரிய பெரிய மரத்தை எல்லாம் வெட்டணும். இல்லன்னா பேய் இருக்கு, பிசாசு இருக்குன்னு கதைய கிளப்புறவங்க நாக்க வெட்டணும். வீட்டுத் தோட்டத்துல பயமுறுத்திக்கிட்டு இருந்த பேயெல்லாம் டார்ச்-லைட் வந்தப்புறம் இந்த மாதிரி ஊருக்கு வெளியில இருக்கிற பெரிய மரத்துக்கு குடி வந்துடுச்சுன்னு எங்க தாத்தா விளையாட்டா சொல்வார். சரி தான். பேய்ன்னு தனியா ஏதாச்சும் இருக்கா என்ன? மனசுல இருக்கிற பயத்துக்கு பேர் தான் பேய். இந்த ஊர்க்காரங்க தான் சொல்றாங்கன்னா கேசவுக்கு புத்தி எங்க போச்சுன்னு தெரில. கப்பூரார் மனைவி தான் அவர கொன்னாங்களாம். கொல்றவங்களா இருந்தா ஏன் இவ்ளோ நாளுக்கு அப்புறம் கொல்லணும்? அதுவும் 300 கிலோ மீட்டர் தாண்டி வந்து இந்த ஊர்ல தான் கொல்லணுமா?ஊருக்குள்ள வர்றப்பவே கேசவ் சொன்ன மரம் எதுன்னு சுலபமா கண்டுபிடிக்க முடிஞ்சது. ரொம்ப பெரிய மரம் தான். நின...
அந்தி நேர சாயை – 1

அந்தி நேர சாயை – 1

கதை, படைப்புகள்
எப்பவுமே தூங்காத ஆளை நீங்க எங்கயாச்சும் பார்த்திருக்கீங்களா? கப்பூரார் அப்படித் தான். கப்பூரார எங்க வீட்டு சமையற்காரர்னு சொல்லலாம். ஆனா அவர் என்னோட சமையற்காரர் மட்டும் தான். என்னோட 4 வயசுல நான் சாப்ட்டது ஏதோ பாய்சன் ஆகி சாகற ஸ்டேஜுக்கு போயிட்டேனாம். அதுக்கு அப்புறம் என் சாப்பாடு மாறிடுச்சு. ஏகப்பட்ட பத்தியம். எது சாப்டாலும் சுத்த பத்தமா இருக்கணும்னுட்டு.. கலப்படம் இல்லாத சமையல் பொருள வாங்க ஒரு ஆளுயும், அதை சமைக்கறதுக்கு கப்பூராரயும் தாத்தா புதுசா வேலைக்கு வச்சாரு. இப்ப தாத்தா இல்ல. ஆனா அந்தக் குறை எனக்கில்லாததுக்கு கப்பூரார் தான் காரணம். அப்பாவ விட பத்து பதினைஞ்சு வயசு அதிகமா இருக்கும். அவரோட பெயர் நாராயணன்னு நினைக்கிறேன். அவர் ஊர்ப் பெயரைச் சொல்லி சொல்லி.. அதே பழக்கம் ஆயிடுச்சு எங்க வீட்டுல.கப்பூராருக்கு எங்கள விட்டா யாரும் இல்ல. அவருக்கு பதினேழு பதினெட்டு வயசுலயே கல்யாணம் ஆயிடுச்சு. ...
மாயப் புன்னகை

மாயப் புன்னகை

கதை, படைப்புகள்
தர்மம் தன் இயல்பை மறைத்து கோப வேடத்தினை அணியத் தெரியாமல் அணிந்தது போலிருந்தது. எதிரில் நிற்கும் தர்மனைப் பார்க்கவே கர்ணனுக்கு வேடிக்கையாக இருந்தது. பரிதாபமாகவும் இருந்தது. இன்றே சண்டையை முடித்து விடும் தீவிரத்துடன் தர்மர் தன்னுடன் போர் புரிய ஆயுத்தமாவது போல் கர்ணனுக்குத் தோன்றியது. ஆனால் கர்ணன் மனதில் அன்று ஏனோ இனம் புரியா சோர்வு. பதினாறே நாட்களில் கணக்கில்லா இழப்புகள். பீஷ்மர், துரோனர் போன்ற உத்தம மகா வீரர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அநாவசியமாக அபிமன்யுவின் முகம் தோன்றிக் குற்றயுணர்ச்சியைக் கிளறியது.யுதிஷ்ட்ரனுக்கு தர்மன் என்ற பெயர் பொருத்தமானது தானா என்று யோசித்தான் கர்ணன். வஞ்சகமாக அன்றோ துரோனரை வீழ்த்தி உள்ளனர்? தர்மரின் அம்பு கர்ணனின் வில் நாணை அறுத்தது. வேகமாக நாணைக் கட்டிய கர்ணனால் அதே வேகத்தில் அம்பினைச் செலுத்த முடியவில்லை. நான் உனது தமையன் என்று கூறினால் தர்மன் ஒருவேளை ...