
‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அன்ட் வேர் டூ ஃபைண்ட் தெம் (FANTASTIC BEASTS AND WHERE TO FIND THEM)’ எனும் படம் ஆங்கிலத்திலும் தமிழிலும் தெலுங்கிலும் நவம்பர் 18 ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது. ஹாரி பாட்டர் புத்தகங்களை எழுதிப் பெரும்புகழை அடைந்த பெண் எழுத்தாளர் J. K. ரெளலிங்கின் கற்பனையில் இருந்து உதித்த மற்றொரு படமிது. அதை விட, திரைக்கதையாசிரியராக அவதாரமெடுத்திருக்கும் முதல் படமிது என்பது இப்படத்திற்கான கூடுதல் சிறப்பு. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் தன்னை இனைத்துக் கொண்டுள்ளார்.
‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அன்ட் வேர் டூ ஃபைண்ட் தெம்’ என்பது ஒரு புத்தகத்தின் பெயர். ஹாரி பாட்டர் பாடப் புத்தகமான தன் கையில் வைத்திருக்கும் இந்தப் புத்தகத்தை எழுதியவர் நியூட் ஸ்கேமண்டர். அந்தக் கதாப்பாத்திரம் தான் இந்தப் படத்தின் ஹீரோ. நியூட் ஸ்கேமண்டராக நடித்துள்ளார் எடி ரெட்மெய்ன். எந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்தாலும், அந்தக் கதாப்பாத்திரமாகவே மாறி விடுபவர் எடி ரெட்மெய்ன் என்பதற்கு தி டேனிஷ் கேர்ள், தி தியரி ஆஃப் எவரிதிங் போன்ற படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
2டி, 3டி, ஐமேக்ஸ் வடிவில், விசித்திரமான பிராணிகள் திரையில் உலா வரப் போகிறது. விலங்கியல் நிபுணரான நியூட் ஸ்கேமண்டர், வினோதமான குணாதிசயங்கள் கொண்ட சில வகை பிராணிகளைத் தன் கைப்பெட்டிக்குள் ரகசியமாக வைத்துள்ளார். எதிர்பாராத விதமாக அவை திறந்து விடப்பட, அதன் விளைவுகள் பற்றி அச்சம் கொள்கிறார் அவர்.
விலங்கியல் நிபுணரான அவர், விசித்திரமான, வினோதமான குணாதிசயங்கள் கொண்ட சில வகை பிராணிகளை தன் கைப்பெட்டிக்குள் ரகசியமாக வைத்துள்ளார்! எதிர்பாராத விதமாக அவை திறந்து விட பட, அதன் விளைவுகள் பற்றி அச்சம் கொள்கிறார் அவர். அப்பிராணிகளைத் தேடி, யாருக்கும் எந்தத் தீங்கும் நேரும் முன் மீட்கிறது ஸ்கேமண்டருடன் இணையும் மூவரணி.
இதுவரை, நான்கு ஹாரி பாட்டர் படங்களை இயக்கியுள்ள டேவிட் யேட்ஸ், இப்படத்தையும் இயக்கியுள்ளார். பிரம்மாண்டமாய்த் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை, வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் உலகமெங்கும் வெளியிடுகின்றனர்.