Hit 1, 2,3 திரைப்பட வரிசை மூலம் புகழ் பெற்ற இயக்குநரான சைலேஷ் கொளனு இயக்கத்தில், ஷியாம் சிங்க ராய் படத்தைத் தயாரித்த வெங்கட் போயனப்பள்ளியின் தயாரிப்பு நிறுவனமான நிஹாரிகா தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெங்கடேஷ், நவாசுதீன் சித்திக், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ருஹானி சர்மா, சாரா மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் “சைந்தவ்”.
முதன்முதலாக வெங்கடேஷ் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிவரும் இத்திரைப்படம், நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் 75வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. “சைந்தவ்” திரைப்படத்தை நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் மிகப் பெரும் பொருட்செலவில் எந்தவொரு சமரசமும் இன்றி உருவாக்கி வருகிறது.
சமீபத்தில் “சைந்தவ்” படத்தின் உணர்ச்சிகரமான க்ளைமாக்ஸ் காட்சியை 8 முக்கிய நடிகர்களை உள்ளடக்கி கடுமையான சூழ்நிலைக்கு மத்தியில் 16 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, முடித்து வெற்றிகரமாக திரும்பி இருக்கின்றனர் படக்குழுவினர்.
ராம்-லக்ஷ்மண் மாஸ்டர்கள் இந்த சண்டைக் காட்சியை மிக வித்தியாசமான முறையில் வடிவமைத்து இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் வெங்கடேஷ் நடிப்பில் உருவான படங்களில் அதிக பொருட்செலவைக் கோரிய க்ளைமாக்ஸ் காட்சி “சைந்தவ்” படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி தான் என்று கூறப்படுகிறது.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, எஸ் மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். கேரி பிஹெச் எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் உள்ளனர். கிஷோர் தல்லூரி இணைத் தயாரிப்பாளர். இது அனைத்து தென் இந்திய மொழிகளிலும் ஹிந்தியிலும் டிசம்பர் 22 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு வெளியாகிறது.