நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மென்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் படத்தின் பெயர் “கூத்தன்”. இப்படத்தில், அறிமுக நாயகன் ராஜ்குமார் , அறிமுக நாயகிகள் ஸ்ரீஜிதா, சோனல், கிரா, ஆகியோர் நடித்தள்ளனர். இவர்களுடன், பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா,கவிதாலயா கிருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என ஒரு திரையுலகப்பட்டாளமே நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 3 அன்று நிகழ்ந்தது.
தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா, “உலகில் முதலில் வந்தது கூத்துதான். கூத்தன் நல்ல தலைப்பு. தயாரிப்பளரின் முயற்சியில்நிறைய நேர்மை இருக்கிறது. நல்ல முறையில் படக்குழுவினர் உழைத்துள்ளார்கள். பாக்யராஜ்இந்தப்படத்தில் இருப்பது மிகப்பெரிய பிளஸ். பெண்களுக்கு கண்கள் அழகாக இருப்பது மிகப் பெரிய பிளஸ். இந்தப் படத்து நாயகனின் கண்கள் வசீகரமாக இருக்கிறது. அவர் மிகப்பெரிய இடத்திற்கு செல்வார்” என வாழ்த்தினார்.
கூத்தன் படத்தில் நடித்துள்ள கே.பாக்யராஜ், “நான் இந்த மாதிரியான கதையை அடிப்படையாக வைத்து ஒரு கதையை யோசித்து வைத்திருந்தேன். ஆனால் இந்தப் படத்தை அவர்கள் அற்புதமாக எடுத்திருக்கிறார்கள்.
டான்ஸ் சம்பந்தமான நாகேந்திர பிரசாத் இதில் நடித்திருக்கிறார். தயாரிப்பாளர் ஒரு பேக்கரியில் வேலை பார்த்து இந்த அளவு முன்னேறியிருக்கிறார். எல்லாவற்றிலும் மிகுந்த திட்டமிடலுடன் இயங்குகிறார். இசை மேடையிலேயே வியாபாரத்தைத் தொடங்கிவிட்டார். இதற்கு அவர் நண்பர்களுக்குத்தான் அவர் நன்றி சொல்ல வேண்டும். நாயகன் புதியவர் போல் இல்லாமல் அதிகமாக உழைத்திருக்கிறார். திட்டமிடலுன் இயங்கும் இக்குழு கண்டிப்பாக வெற்றி பெறும்” என்று பேசினார்.
“இந்தப் படத்தின் இயக்குநர் வெங்கியை முப்பது வருடமாக தெரியும். அவர் அப்போதே ஜீனியஸ். எங்களுக்குத் தெரியாத பல விசயங்கள் அவருக்கு தெரியும். இயக்குநர் தயாரிப்பாளருக்குள் சண்டை வராத படங்கள், என்னைப் பொருத்த வரை விளங்காது.
என்னுடைய புலன் விசாரணை படத்தில் ரிலீஸின் போது என்னை அலுவலக ரோட்டிலேயே வரக்கூடாது என்றார் என் தயாரிப்பாளர். ஆனால் பட ரிலீஸுற்கு பின் என்னைக் கூப்பிட்டுப் பாராட்டினார். அது போல் இந்தப் படத்திலும் எதாவது மனத்தாங்கல் இருந்தால் பட ஹிட்டுக்குப் பிறகு நீங்கள் இணைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நாயகனின் கண்கள் விஜயகாந்தைப் போல் உள்ளது. அவர் போல் இவரும் மிகப்பெரும் இடத்தை அடைவார்” என வாழ்த்தினார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி.
படத்தின் இசையமைப்பாளர் பால்ஜீ, “நான் திரைப்படக் கல்லூரியில் படித்த காலத்திலிருந்தே, மேடையில் இருப்பவர்கள் அனைவரையும் வியந்து பார்த்திருக்கிறேன். இவர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டது மிகப் பெரிய விசயம். இந்தப் படத்தில் எல்லோரும் ரசிக்கக் கூடிய துள்ளலான இசையைத் தந்திருக்கிறோம். படம் டான்ஸை மையமாகக் கொண்டது என்பதால் அதைச் சுற்றி இசை அமைத்திருக்கிறேன். எல்லோரும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்” என்றார்.
கூத்தன் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் நாகேந்திர பிரசாத். அவர் பேசும்பொழுது, “இப்படத்தின் தயாரிப்பாளர் சினிமா மேல் வைத்திருக்கும் அன்பு என்னைப் பிரமிக்க வைத்தது. படத்தில் அனைவருமே கடினமாக உழைத்திருக்கிறார்கள். படத்தின் நாயகன் அற்புதமாக ஆடியுள்ளார்” என்றார்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்:
>> இசை – பாலாஜி
>> ஒளிப்பதிவு – மாடசாமி
>> படத்தொகுப்பு – பீட்டர்பாபியா
>> கலை – சி.ஜி.ஆனந்த்
>> நடனம் -அசோக் ராஜா, சுரேஷ்
>> நிர்வாக தயாரிப்பு – மனோஜ் கிருஷ்ணா
>> தயாரிப்பு நிறுவனம் – நீல்கிரிஸ் ட்ரீம் என்டர்டெய்ன்மென்ட்
>> தயாரிப்பு – நீல்கிரிஸ் முருகன்