Shadow

‘பூமி’க்கான இசை

Saregama-rhapsody-pgm

பூமியெனும் தொண்டு நிறுவனத்திற்காக, ரப்சடி (Rhaspody) குழுவின் ‘ஆர்க்கெஸ்ட்ரா, சென்னை அரசு அருங்காட்சியகத்தில் ஜூலை 14 அன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் PMG (Pioneer Music Gym) -ஐச் சேர்ந்த 15 பாடகர்கள் மேடையில் பாடி அசத்தினார்கள். PMG குடும்பத்தில் பல்வேறு துறைகளில் இருக்கும் நபர்கள் ஒருங்கிணைந்துள்ளனர். மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், ஆடிட்டர்கள், தொழில்முனைவோர்கள், வங்கி உயரதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், ஓய்வு பெற்றவர்கள், குடும்பத் தலைவிகள் என அனைவரும் ஒன்றிணைந்து, இசையின் பேரானுபவத்தைப் பாடிக் கொண்டாடி வருகின்றனர்.

‘SA RE GA ME‘ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ரப்சடி (Rhapsody – மகிழ்ச்சியைத் துள்ளலாக வெளிப்படுத்துவது) குழு பாடகர்கள், தமிழ், ஹிந்தி என 28 பாடல்கள் பாடினர். PMG-ஐத் தொடங்கிய Pioneer சுரேஷ் வழி நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் S.P.பாலசுப்ரமணியம் அவர்கள் நிகழ்ச்சியில் பாடியவர்களை வாழ்த்தி அனுப்பிய காணொளி திரையில் திரையிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின், ‘பாக்காத பாக்காத’ பாடலுக்கு வயலின் வாசித்த ஒரிஜினல் வயலினிஸ்ட் ஐந்து பேர்  வாசித்தது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக PMG சார்பாக Pioneer சுரேஷ், பூமி என்ற தொண்டு நிறுவன வளர்ச்சிக்காக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த Dr.பிரகலநாதனுக்கு 2 லட்சம் நிதியுதவி வழங்கினார். தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், சண்டிகர், டெல்லி NCR, உத்திர பிரதேஷ் ஆகி இடங்களில் இருக்கும் தொண்டு நிறுவனமான ‘பூமி’யில், 12 மாநகரங்களில் இருந்து 15,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். அனாதை இல்லங்களில், நகர் சார்ந்த குடிசைப்பகுதிகளில் கல்விக்கான மாற்றத்தை ஏற்படுத்துவதும்; சுற்றுச்சூழல், ஆரோக்கியம், சாலை விதிகள் போன்றவைகளில் குடிமக்களின் கவனத்தைக் கோரும் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதும்தான் ‘பூமி’யின் பிரதான இலக்குகள்.