Shadow

Tag: ஃபஹத் ஃபாஸில்

வேட்டையன் விமர்சனம்

வேட்டையன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
"மன்னிக்கிறவன் மனுஷன். மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்."- அன்னலட்சுமி, சின்ன கோளாறுபட்டி விரைவான நீதியை அளிக்கும் அவசரத்தில், நிரபராதியை என்கவுன்ட்டர் செய்து விடுகிறார் காவல்துறை கண்காணிப்பாளர் அதியன். நீதிபதி சத்யதேவால், கொலை செய்யப்பட்டவன் நிரபராதி எனத் தெரிந்ததும், உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார் அதியன். ரஜினியிசத்தை மிக கிரேஸ்ஃபுல்லாகத் திரைக்குக் கொண்டு வந்துள்ளார் த.செ.ஞானவேல். எனினும் ஜெயிலரின் நீட்டித்த பதிப்போ எனும் தோற்றத்தை எழுப்புகிறது. படத்தை ரசிக்கும்படியாக மாற்றுவது 'பேட்டரி' பேட்ரிக்காக நடித்திருக்கும் ஃபஹத் ஃபாசில் மட்டுமே! ரஜினி போன்ற கரீஸ்மாட்டிக் ஹீரோவையும் சுலபமாக ஓரங்கட்டி விடுகிறார். 'அறிவு திருடனாகுறதுக்குத்தான் வேணும்; போலீஸாக வேணாம்' என அவர் எந்த வசனத்தைப் பேசினாலும் ரசிக்க வைக்கிறது. நீதிபதி சத்யதேவாக அமிதாப் பச்சனைப் படம் நெடுகே வரும் பாத்திரமாக...
S.S.ராஜமெளலியின் மகன் S.S.கார்த்திகேயா தயாரிக்கும் ஃபஹத் ஃபாஸிலின் 2 படங்கள்

S.S.ராஜமெளலியின் மகன் S.S.கார்த்திகேயா தயாரிக்கும் ஃபஹத் ஃபாஸிலின் 2 படங்கள்

இது புதிது
முன்னணி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா, மலையாளப் படமான பிரேமலு படத்தினைத் தெலுங்கு ரசிகர்களுக்குத் தெலுங்கு மொழியில் வெளியிட்டதன் மூலம் திரைப்பட விநியோகத் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். தெலுங்கில் ஷோயிங் பிசினஸ் (Showing Business) பேனரின் கீழ் இப்படத்தை விநியோகித்தார். எஸ்.எஸ்.கார்த்திகேயாவின் முதல் வெளியீடே தெலுங்குப் பதிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம் திரையரங்குகளில் மக்கள் பேராதாரவுடன் ஒவ்வொரு நாளும் பெரும் வசூலைக் குவித்து வருகிறது. பிரேமலுவின் பிளாக்பஸ்டர் வெற்றியால் பெற்ற நம்பிக்கையால் உற்சாகமடைந்துள்ள எஸ்.எஸ்.கார்த்திகேயா அடுத்ததாக படத் தயாரிப்பில் இறங்குகிறார். மேலும் இந்தியாவின் பெருமைமிக்க, புகழ்பெற்ற தயாரிப்பாளர்களான பாகுபலி பட நிறுவனமான ஆர்கா மீடியா வொர்க்ஸுடன் இணைந்து, தான் அடுத்ததாக தயாரிக்கவுள்ள அடுத்த இரண்டு திரைப்படங்கள் குறி...
மாமன்னன் விமர்சனம்

மாமன்னன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் மற்றும் அண்ணல் காந்தியடிகள் ஆகியோரின் அருபெரும் முயற்சியால், பட்டியலினச் சமூகம் மற்றும் பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த மக்களும் அதிகார அமைப்புக்குள் வர வேண்டும் என்கின்ற உயரிய எண்ணத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு சரத்தாகவே நிறைவேற்றிய சமாச்சாரம் தான் “தனித் தொகுதி” திட்டம். இது கிட்டத்தட்ட 1932 ஆம் ஆண்டு காலம் தொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். இதற்கு முதன்முதலாக 1891ஆம் ஆண்டு காலத்திலேயே தமிழகத்தில் இருந்து குரல் எழுப்பியவர்கள் அயோத்திதாச பண்டிதரும், இரட்டைமலை சீனிவாசன் அவர்களும் தான். ஆரம்பக் காலகட்டங்களில் பட்டியலினச் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், சீக்கியர்களுக்கு இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட தொகுதியில் மட்டும் பட்டியலினப் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்களும் இஸ்லாமிய சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த மக...
நிலை மறந்தவன் விமர்சனம்

நிலை மறந்தவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
Trance எனும் மலையாளப் படத்தைத் தமிழில் ‘நிலை மறந்தவன்’ என மொழிமாற்றி வெளியிட்டுள்ளனர். ட்ரான்ஸ் என்றால் பித்து நிலை எனச் சொல்லலாம். பித்து நிலையில், மனிதன் தன்னிலை மறந்து, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரியாமல் இருக்கும் நினைவிழந்த நிலை. அப்படி மனிதனைத் தன்னிலை மறக்கச் செய்யும் ஒரு வியாபார யுக்தியை ஜீசஸின் பெயரால் உருவாக்குகின்றனர் வில்லன்கள். விட்டில் பூச்சிகளாய் அதில் தன்னிலை மறந்து விழும் மக்களைக் கொண்டு எப்படிக் கோடியில் புரளுகின்றனர் என்பதே படத்தின் கதை. ட்ரான்ஸ், அமேசான் ப்ரைமில் காணக் கிடைத்தாலும், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரிய திரையில் காணும் அனுபவம் சிறப்பாக இருக்கிறது. படத்தின் முதல் முப்பத்தைந்து நிமிடங்கள் மட்டுமே ஒரு மலையாளப் படம் பார்த்த நிறைவினைத் தருகிறது. அதற்குப் பின்னான படம், கிறிஸ்துவ மதத்தை வியாபாரமாகப் பயன்படுத்துவோர்களின் முகமூடி கிழிபடுவதை ரசிக்கும் ...
நிலை மறந்தவன் – மதமும் மோசடியும்

நிலை மறந்தவன் – மதமும் மோசடியும்

சினிமா, திரைத் துளி
தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் ஜூலை 15இல் தமிழில் வெளியாக இருக்கும் படம் ‘நிலை மறந்தவன்’. மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராகவும், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிரட்டல் வில்லனாகவும் நடித்துவரும் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார். ராஜாராணி, நையாண்டி படங்களில் கதாநாயகியாக நடித்தவரும் பஹத் பாசிலின் மனைவியுமான நடிகை நஸ்ரியா நசீம், இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். வில்லன்களாக இயக்குநர் கெளதம் மேனனும், அவருடன் விக்ரம் படத்தில் கெட்ட போலீஸாக நடித்த செம்பன் வினோத்தும் நடிக்க, திமிரு படத்தில் நடித்த விநாயகம், இதில் மனதைத் தொடும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ராஜமாணிக்கம், உஸ்தாத் ஹோட்டல் ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவரும், பிரேமம் போன்ற சூப்பர்ஹிட் படங்களைத் தயாரித்தவருமான பிரபல மலையாள இயக்குநர் அன்வர் ரஷீத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மலையாளத்தில் 'ட்ரான்ஸ்' என்...
விக்ரம் விமர்சனம்

விக்ரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கைதியின் தொடர்ச்சியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜின் படமாக வந்துள்ளது விக்ரம். மகனின் மரணத்துக்குக் காரணமானவர்களைப் பழிவாங்குவது போல் ஒரு மேல்தோற்றம் தெரிந்தாலும், போதை வஸ்துகளற்ற சமூகத்திற்கான போராடும் வேட்டையாளராக விக்ரம் காட்டும் ஆக்ரோஷம் தான் படத்தின் கதை. மல்டிஸ்டார் படத்தை எப்படி ஹேண்டில் செய்யவேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாகப் படம் திகழ்கிறது. ஒற்றை நாயகனின் சூப்பர் ஹீரோயிச பாணியில் சிக்குண்ட தமிழ்த் திரையுலகின் நார்சிஸ சூழலில் இருந்து வெளிவந்து, படத்தின் முதற்பாதி நாயகனாகப் பஹத் பாசிலை மிளிர விட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். படத்தின் வில்லன் யார், நாயகன் யார் என பஹத் பாசிலின் இன்வெஸ்டிகேஷனில் முதற்பாதி பரபரவென ஓடுகிறது. இந்த யுக்தி, சந்தனமாக வரும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திற்கும், பின்பாதியில் விக்ரமாகக் கர்ஜிக்கும் கமல் ஹாசனிற்கும் ஆழமான அடித்தளம் அமைத்துள்ளார். அதே போல் படம...
புஷ்பா: தி ரைஸ் – அதிவிரைவு ரோலர் கோஸ்டர்

புஷ்பா: தி ரைஸ் – அதிவிரைவு ரோலர் கோஸ்டர்

சினிமா, திரைச் செய்தி
அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா – தி ரைஸ்’ திரைப்படம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜனவரி 7 ஆம் தேதி அன்று அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியாவின் கூட்டுத் தயாரிப்பில் உருவான மெய்சிலிர்க்க வைக்கும் சண்டைக் காட்சிகள் நிறைந்த இத்திரைப்படத்தில், கதை நாயகனாக அல்லு அர்ஜூன் தோன்ற, அவரோடு ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகியோர் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள். ஃபஹத் ஃபாசில், தெலுங்கில் அறிமுகமாகும் முதற்படமிது என்பது குறிப்பிட்த்தக்கது. புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1, ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள சேஷாசலம் காட்டுப் பகுதிகளுக்குள் மெய்சிலிர்க்க வைக்கும் தீவிரமான பயணத்திற்குப் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. புஷ்பராஜ் என்ற லாரி ஓட்டுநர் பாத்திரத்தில் தோன்றும் அல்லு அர்ஜூன், செம்மரக்கட்டை கடத்தல் தொழிலில் தீவிரமாக ஈடு...
சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்

சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வாழ்வின் ரகசியத்தைப் பற்றிச் சொல்லும் 175 நிமிடங்கள் ஓடும் நீளமான படம். மணமாகிவிட்ட வேம்பு, தனது கல்லூரிக் காதலனுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கும் பொழுது அவன் இறந்து விடுகிறான்; பள்ளியைக் கட்டடித்து விட்டு பிட் படம் பார்க்கும் பள்ளி மாணவர்களின் ஒருவனது அம்மா அந்தப் படத்தில் தோன்றுகிறார்; வீட்டை விட்டு ஓடிப் போய்விட்ட தந்தையை முதல்முறையாகப் பார்க்கக் காத்திருக்கும் சிறுவன் முன் ஷில்பா வந்து இறங்குகிறாள்; தற்கொலை செய்து கொள்ள கடலில் இறங்கி சுனாமியில் சிக்கிய தன்னைக் காப்பாற்றிய ஒரு சிலையை ஆண்டவராக எண்ணி சதா பிரார்தித்துக் கொண்டிருக்கிறான் தனசேகர். இப்படி நான்கு கிளைக்கதைகளை ஒன்றிணைக்கும் தரமான கலகலப்பான அடலட் (A) மூவியாக சூப்பர் டீலக்ஸ் உள்ளது. நீளத்தை மட்டும் கத்தரித்திருந்தால் படத்தின் விறுவிறுப்பு கூடி சலிப்பு தட்டாமல், முதல் பாதியைப் போலவே இரண்டாம் பாதியையும் ரசித்திருக்க இயலும். முக்கி...
கும்பளாங்கி நைட்ஸ் – அன்பால் ஒளி வீசும் கதவற்ற வீடு

கும்பளாங்கி நைட்ஸ் – அன்பால் ஒளி வீசும் கதவற்ற வீடு

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
வீடென்பது வெறும் செங்கல்லாலும் சிமெண்டாலும் கட்டப்படுவது அல்ல. அன்பின் நிறைவு மட்டுமே ஒரு வீட்டை வீடாக மாற்றவல்லது. 'கும்பளாங்கி நைட்ஸின்' கதையை இப்படி ஒற்றை வரி 'க்ளிஷே'வுக்குள் அடக்கி விடலாமா என்றால்... கூடாது. இந்தத் திரைப்படம் சொல்லும் பல்வேறு அடுக்குகளில் அதுவுமொன்று என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். எண்ணற்ற மனித உணர்வுகளின் இயல்பான வெளிப்பாடு என்றும் சொல்லலாம். வெவ்வேறு கதாபாத்திரங்களின் ஆனந்தமும் கண்ணீரும் வீழ்ச்சியும் உயர்ச்சியும், வலியும் இறுமாப்பும், காதலும், பொறாமையும், வியப்பும், மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் அவைகளை இணைக்கும் ஒற்றை இழையாக அன்பும் நிறைந்து தளும்பும் அபாரமான உணர்வெழுச்சியென்றும் அடையாளப்படுத்தலாம். சமூகத்தில் உதிரிகளாக வாழ்ந்து முடிக்கும், இலக்கற்ற வாழ்க்கையை மேற்கொள்ளும் சின்னச் சின்ன விசயங்களுக்குக் கூட அடித்து உருளும் சகோதரர்களுக்கிடையே வாழ்க்கை எப்படி வ...
மலையாள சினிமாவின் ‘டேக் ஆஃப்’

மலையாள சினிமாவின் ‘டேக் ஆஃப்’

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மையத்தை நோக்கி சோம்பலாக நீந்தும் பம்மாத்துக்கள் எதுவும் இல்லாத நேரடியான கதை. ஏற்கெனவே ஏசியாநெட்டிலும் இன்ன பிற தொலைக்காட்சிகளிலும் அலசப்பட்ட கரு. சில ஆண்டுகளுக்கு முன்னால், ஈராக்கில் பணிபுரிந்து ஐஎஸ் தீவிரவாதிகளின் பிணைக்கதிகளாகச் சிக்கி மீட்கப்பட்டவர்களின் கதைதான் இது என்று தெளிவாகக் கதையின் க்ளைமாக்ஸையே சொல்லி விட்டுத் தொடங்கும் படம். வெறும் செய்தியாக மட்டுமே இந்த நிகழ்வுகளைப் பார்த்தவர்களுக்கு அந்தச் செய்திகளுக்குப் பின்னால் இருக்கும் உறைந்து போன நிமிடங்களை, அதிலிருந்த பயத்தை, அந்த நாட்களின் வேதனையை, விட்டு வருவதா அங்கேயே இறப்பதா என்ற ஊசலாட்ட மனநிலையின் வலியை ஆழமாகக் கடத்துவதில்தான் ஒரு தேர்ந்த இயக்குநர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியும். பல படங்களுக்கு எடிட்டராகப் பணிபுரிந்து முதன்முறையாக இயக்கத்தில் ஈடுபட்டிருக்கும் மகேஷ் நாராயணன், தன் முதல் படத்திலேயே தன்னைத் தேர்ந்த இயக்கு...