Shadow

Tag: ஃபேஸ்புக்

உணவுக்கு மரியாதை

உணவுக்கு மரியாதை

கட்டுரை, சமூகம்
பசங்க-2 படத்தில், தன்னை விருந்துக்கு அழைத்தவரை ஃபோனில் தொடர்பு கொண்டு, தன் மனைவிக்கு என்ன உணவுகள் பிடிக்குமெனப் பட்டியலிடுவார் சூர்யா. "விருந்துக்குப் போற இடத்தில் என்னென்ன வேணும்னு இப்படியா லிஸ்ட் போடுவாங்க?" எனக் கேட்பாங்க அமலா பால். "பின்ன நம்மள விருந்துக்குக் கூப்பிட்டு, அவங்களுக்குப் பிடிச்சதைலாம் சமைச்சு வச்சிருப்பாங்க. நம்மளுக்குப் பிடிச்சதுலாம் அப்றம் எப்ப சாப்பிடுறது?" எனப் பதிலளிப்பார் சூர்யா. இத்தகைய அற்புதமான காட்சி வைத்தமைக்கு இயக்குநர் பாண்டிராஜைப் பாராட்டியே ஆகவேண்டும். அன்புடன் நமக்களிக்கப்படும் உணவு நம் விருப்பத் தேர்வாக இருந்தால் நல்லதுதானே.! துரதிர்ஷ்டவசமாக, நாம் உண்ணும் உணவுகள் இப்போ நம் விருப்பத்திற்கு இருப்பதில்லை. 20 ஆண்டுகளுக்கு முன் நூடுல்ஸைக் கண்டோமா, ஓட்ஸைக் கண்டோமா? விளம்பரங்கள் மூலம் யாரோ எவரோ நாம் சாப்பிட வேண்டியதைத் தீர்மானிக்கத் தொடங்கி இரண்டு தசாப்தங்களுக...