Shadow

Tag: ஃபைண்டர் புராஜக்ட் 1 விமர்சனம்

ஃபைண்டர் புராஜக்ட் – 1 விமர்சனம்

ஃபைண்டர் புராஜக்ட் – 1 விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
எந்தவித குற்றமும் செய்யாமல் சிறைக்குள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிரபராதிகளின் நிலையைப் பற்றி பேசுகிறது ஃபைண்டர் திரைப்படம்.குற்றவியல் தொடர்பான படிப்பில் முதுகலை பெற்ற மாணவர்கள் சிலர் இணைந்து தனியார்மயமான துப்பறியும் நிறுவனம் ஒன்றை துவங்குகிறார்கள். இவர்களுக்கு அவர்கள் படித்த அதே கல்லூரியில் படித்து விட்டு தற்போது அரசுத்தரப்பு வக்கீலாக பணியாற்றி வரும் நிழல்கள் ரவி உறுதுணையாக இருந்து வழிகாட்டுகிறார். குற்றம் இளைக்காமல் சூழ்நிலை காரணமாக சிறையில் மாட்டிக் கொண்டு தவிக்கும் நிரபராதிகளை விடுதலை செய்ய வேண்டுமென்பதை தங்கள் குறிக்கோளாக கொண்டு செயல்பட விரும்பும் இந்த மாணவர்கள் தங்கள் அமைப்பிற்கு ஃபைண்டர் என்று பெயர் வைத்து, தங்கள் நோக்கம் குறித்து பத்திரிக்கையில் விளம்பரம் கொடுக்கிறார்கள். அந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு பலரும் எங்களுக்கு உதவுங்கள் என்று வந்து நிற்க, அதில் உண்மையா...