Shadow

Tag: அகவன் திரைப்படம்

அகவன் விமர்சனம்

அகவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அகவன் என்றால் உள்ளிருப்பவன் எனப் படத்தின் உபத்தலைப்பிலேயே விளக்கம் உள்ளது. ஏகனான சிவன், அனைத்து உயிரினங்களுள்ளும் அநேகனாய் உறைந்துள்ளான் என்பதே படத்தலைப்பின் பொருள். பெருவெள்ளம் ஏற்பட்ட காலத்தில், லிங்கோத்பவராய் உயர்ந்து நிற்கும் சிவனின் ஓவியத்தைக் கண்ட ராஜராஜ சோழனுக்கு ஓரெண்ணம் எழுகிறது. அதன் படி, ஒவ்வொரு கோயிலின் ராஜ கோபுரத்திலும் சில ரகசிய ஏற்பாடுகளை அமைக்கிறார். அதென்ன ரகசியம் என்பதும், அந்த ரகசியத்தை அறிந்து கொண்ட தீயவர்களின் சதித்திட்டம் எப்படிக் கலையப்படுகின்றது என்பதும்தான் படத்தின் கதை. தத்துவச் சாயலுடைய தலைப்பெனினும், படம் நல்லதொரு த்ரில்லராய் ஈர்க்கிறது. மூன்று பொண்டாட்டிக்காரராக வரும் தம்பி ராமய்யாவின் காட்சிகளைக் கத்தரித்து, படத்தின் நீளத்தைச் சுருக்கி, முழு நீள த்ரில்லராய்த் தொடக்கம் முதலே கொண்டு போயிருக்கலாம் இயக்குநர் APG. ஏழுமலை. சிராஸ்ரீ, நித்யா ஷெட்டி எனப் படத்தில் இ...