Shadow

Tag: அசோக்

இமெயில் விமர்சனம்

இமெயில் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகி “DIE GAME” என்கின்ற விளையாட்டை விளையாட இமெயில் வழியே ஒரு அழைப்பு வருகிறது. அவரும் அந்த விளையாட்டை விளையாடத் துவங்குகிறார். அதில் மூன்று பேரின் புகைப்படம் இருக்கிறது.  அவர்களில் யார் இறக்கப் போகிறார்கள் என்பதை நாயகி சரியாக கணித்துவிட்டால் அவளுக்கு பெரிய பரிசுத் தொகை கிடைக்கும் என்று விதிமுறைகள் கூற, பணத்தேவையில் இருக்கும் நாயகி அந்த விளையாட்டை விளையாடத் துவங்குகிறாள். அந்த விளையாட்டு விபரீதமாகி நாயகியின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போட்டது என்பதே “இமெயில்” திரைப்படம்.கேட்பதற்கு சுவாரஸ்யமாகத் தோன்றக் கூடிய நல்ல லைன் தான். ஆனால் அந்த லைனை, கதையாக மாற்றி, அதற்கு திரைக்கதை எழுதிய விதத்தில் தான் படக்குழுவினர் கோட்டை விட்டிருக்கின்றனர்.ஆரம்பத்தில் வரும் காதல் எபிசோடுகளும், மனோபாலா வரும் எபிசோடுகளும் நம் பொறுமையை அதிகமாக சோதிக்கின்றன.  ஹீரோயின் விபரீதமான அந்த விளையாட்டை விளையாடத் துவ...
Are you ok baby விமர்சனம்

Are you ok baby விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
 ஒரு விசித்திரமான சூழலில் தனக்குப் பிறந்த குழந்தையை ஒரு தாய் பணம் பெற்றுக் கொண்டு தத்தெடுத்து வளர்க்க விரும்பும் தம்பதிக்கு கொடுத்துவிடுகிறாள். அவளே ஒரு வருடம் கழித்து தன் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தையும்  அணுகுகிறாள்.  முடிவு என்ன ஆனது என்பதே “Are You Ok Baby” திரைப்படத்தின் ஒற்றை வரிக் கதை.இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணன் ஹோஸ்டிங் செய்து நடத்திய “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியைப் போன்ற “சொல்லாததும் உண்மை” என்கின்ற நிகழ்ச்சியில் இருந்து தான் திரைப்படம் துவங்குகிறது.  அந்த நிகழ்ச்சியை திரைப்படத்திற்குள் வழங்குபவராக லஷ்மி ராமகிருஷ்ணன் நடித்திருப்பதோடு இப்படத்தை இயக்கியும் இருக்கிறார்.“சொல்லாததும் உண்மை” என்கின்ற அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் ஒரு இளம்பெண், தன் சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய குழந்தையை சிலர் பணம் கொடுத்து பெற்றுக் கொண...