Shadow

Tag: அஜய் தேவ்கன்

மைதான் விமர்சனம்

மைதான் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தலைப்பையொட்டிப் படத்தின் 90 சதவிகிதத்திற்கு மேலான காட்சிகள் கால்பந்து மைதானத்திலேயே நடக்கின்றன. ஃபின்லாந்தில் நடக்கும் 1952 ஹெல்ஸின்கி ஒலிம்பிக்ஸில் தொடங்கும் படம், 1962 இல் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடக்கும் ஆசியப் போட்டிகளில் படம் முடிகிறது. இந்தப் பத்து ஆண்டுகளில், கால்பந்து பயிற்றுநர் (Football Coach) சையத் அப்துல் ரஹீமின் தலைமையில் இந்தியக் கால்பந்து அணி மேற்கொண்ட பயணத்தை உணர்ச்சிப்பூர்வமாகத் திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் அமித் ரவிந்தர்நாத் ஷர்மா. யுகோஸ்லோவியாவுடனான படுதோல்விக்குப் பின், இந்தியக் கால்பந்து அணியின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் சமயத்தில், அதை மீட்டெடுக்கும் பொறுப்பை ஏற்கிறார் S.A.ரஹீம். செகந்திராபாத்தின் குடிசைப் பகுதியில் இருந்து துளசிதாஸ் பலராமனையும், கல்கட்டாவிலிருந்து பிரதீப் குமார் பேனர்ஜியையும் தேர்ந்தெடுக்கிறார். பலமான இந்திய அணியை உருவாக்க...
RRR விமர்சனம்

RRR விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு படைப்பாளி, பொழுதுபோக்கை மட்டுமே நோக்கமாய்க் கொண்டு, அதைத் தன் பார்வையாளர்களுக்கு, விஷுவல் அழகினை மேம்படுத்திக் கொடுத்தால்? ரத்தம் - ரணம் - ரெளத்திரம் பாகுபலி எனும் அதி பிரம்மாண்டத்திற்குப் பிறகு, ராஜமெளலியின் மற்றொரு பிரம்மாண்டமான படைப்பு. பாகுபலியில் பேரருவியின் அழகு விஷுவலில் திரைக்குள் ஈர்க்கும் ராஜமெளலி, இப்படத்தில், பெருங்கூட்டத்திற்குள் ஒற்றை ஆளாய்ப் பாயும் ராம்சரணின் தீரத்தில் நம்மைத் தூக்கி உள்ளே போட்டுவிடுகிறார். சாத்தியமில்லாத ஒரு காட்சியைச் சாத்தியமாக்கி, அவரது மேஜிக்கிற்குக் கட்டுண்ட வைக்கிறார். படத்தின் முதற்பாதி முழுவதும் ஒவ்வொரு ஃப்ரேமிலுமே ஆச்சரியப்பட வைக்கிறார். 186 நிமிடங்கள் நீள படம் என்பதெல்லாம், இன்றைய சூழலில் பார்வையாளர்கள் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறை. ஆனால், ராஜமெளலியின் மேஜிக் ஷோவில் நேரம் போவதே தெரியவில்லை. The StoRy - The FiRe - The WateR ...
மைதான் – கால் பந்தாட்டத்தின் பொற்காலம்

மைதான் – கால் பந்தாட்டத்தின் பொற்காலம்

சினிமா, திரைத் துளி
இந்தியக் கால்பந்து அணியின் பொற்காலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ள படம் “மைதான்”. அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தில், இந்த ஆண்டு தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தை ZEE ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து வழங்குகின்றனர். 2020 இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய விருது பெற்ற படமான ‘பாதாய் ஹோ’வின் அமித் ரவீந்தர்நாத் சர்மா இப்படத்தை இயக்கயுள்ளார். திரைக்கதை சைவின் குவாட்ரோஸ் மற்றும் வசனங்களை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளனர். "மைதான்" போனி கபூர், ஆகாஷ் சாவ்லா மற்றும் அருணாவா ஜாய் சென்குப்தா ஆகியோர் தயாரிக்கின்றனர். ...