Shadow

Tag: அஜ்மல்

சத்யராஜ், அஜ்மல் நடிக்கும் ‘தீர்க்கதரிசி’

சத்யராஜ், அஜ்மல் நடிக்கும் ‘தீர்க்கதரிசி’

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
ஸ்ரீ சரவணா ஃபிலிம்ஸ் சார்பில் B.சதீஷ் குமார் தயாரிப்பில், PG மோகன் - LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் 'தீர்க்கதரிசி'. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ளப் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் பேசிய இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, “இந்தப் படத்தின் இயக்குநர்கள் தொழில்நுட்பத்தில் சிறந்த வல்லுநர்கள். இந்தப் படத்தின் காட்சிகளைப் பார்க்கும் போது மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டது தெரிகிறது. சத்யராஜ் சாரின் அருமையான நடிப்பு இந்தப்படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. இந்தப்படம் பெரும் வெற்றியடைய அனைவருக்கும் வாழ்த்துகள். இவ்விழாவினில் பேசிய இயக்குநர் பேரரசு, “ஒரு நேர்த்திய...
சித்திரம் பேசுதடி 2 விமர்சனம்

சித்திரம் பேசுதடி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2006 ஆம் ஆண்டு, மிஷ்கின் இயக்குநராக அறிமுகமான ‘சித்திரம் பேசுதடி’ படத்தினைத் தயாரித்தவர்கள் “உலா” எனும் படத்தை ஆறு வருடங்களுக்கு முன் தொடங்கினார்கள். 2013 இல், படத்தின் தயாரிப்பாளரான ஸ்ரீகாந்த் லக்ஷ்மன், ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’க்காக விளையாடிய ட்வெயின் பிராவோவை, ஒரு பாடல் காட்சிக்காக ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது. சாஜன் மாதவின் இசையில் ‘டல்மேனி டல்மேனி டகுல் காட்டுது’ என்ற பாடலிற்கு, வேட்டி கட்டிக் கொண்டு ட்வெயின் பிராவோ ஆடும் நடனம் நன்றாக இருக்கிறது. திரையில் உலா வர வாய்ப்புக் கிடைக்காமல் இத்தனை காலம் கிடப்பில் இருந்த படம், ‘சித்திரம் பேசுதடி 2’ ஆகப் பெயர் மாற்றம் பெற்றுத் திரையேறுகிறது. விதார்த், அஜ்மல், அஷோக், நந்தன் லோகநாதன், நிவாஸ் ஆதித்தன் என ஐந்து பிரதான பாத்திரங்கள். 48 மணி நேரத்தில், இந்த ஐந்து பேருக்கும் நடக்கும் நிகழ்வுகள் தான் படத்தின் மையக்கரு. பிரதான பாத்திரங்கள் மட்டும...
சிரிக்கச் செய்வார் ஆனந்த்ராஜ்

சிரிக்கச் செய்வார் ஆனந்த்ராஜ்

சினிமா, திரைத் துளி
அருள்நிதி - மஹிமா நம்பியார் நடிக்கும் திரைப்படம் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்'. அறிமுக இயக்குநர் மு.மாறன் இயக்கும் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக நடிகர்கள் அஜ்மலும் ஆனந்தராஜும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்து, விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இந்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி அன்று ஆரம்பமாக இருக்கின்றது. "ஆனந்தராஜ் சாரின் கதாபாத்திரம் எங்கள் படத்தின் கதைக்கு மேலும் பலம் சேர்க்கும். அவரின் உடல் பாவனைகளும், வசனங்களும் நிச்சயமாக ரசிகர்களை வாய்விட்டுச் சிரிக்கச் செய்யும். அருள்நிதி சார் - அஜ்மல் - ஆனந்தராஜ் சார் ஆகியோரின் இந்தப் புதிய கூட்டணி, நிச்சயமாக ரசிகர்களின் உள்ளங்களை வெல்லும்" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குநர் மு மாறன்....