Shadow

Tag: அஞ்சலி நாயர்

Once Upon A Time In Madras – Hyperlink த்ரில்லர்

Once Upon A Time In Madras – Hyperlink த்ரில்லர்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' (Once Upon A TIme In Madras) ஆகும். இப்படம் ஹைபர் லூப் வகைமையைச் சார்ந்த த்ரில்லராக உருவாகியுள்ளது. கதையின் நாயகர்களாக பரத், சுஹைல், ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் கண்ணன், "படத்தில் எனக்கும் இயக்குநருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் வந்தன. எனக்கு சரியெனப்படுவது அவருக்கு தப்பு; அவருக்குத் தப்புன்னுபடுறது எனக்கு சரியா இருக்கும். இப்படியும் ஒன்னு எடுத்துக்கோங்க எனச் சொல்லி அவர் ந...
காலங்களில் அவள் வசந்தம் விமர்சனம்

காலங்களில் அவள் வசந்தம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாரம் படத்திற்குத் திரைக்கதை எழுதிய ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள முதற்படம். ஆனால் சீரியசான படமாக இல்லாமல், ரொமெடி (ரொமாண்டிக் காமெடி) வகையைச் சேர்ந்த படமாகக் காலங்களில் அவள் வசந்தம் படத்தை இயக்கியுள்ளார் ராகவ். ராதேவிற்கு, ஷ்யாமின் மீது முதல் பார்வையிலேயே காதல் எழுகிறது. சினிமாவில் காணும் ரொமான்ஸைத் தனது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டுமென உன்னத லட்சியம் உடைய ஷ்யாம், ராதேவைக் கல்யாணம் செய்து கொள்கிறான். எல்லாப் பெண்ணுகளிடமும் ஒரே ரொமான்ஸ் பேட்டர்னை முயற்சி செய்யும் ஷ்யாமின் ரொமான்ஸ் பொய்யானது எனச் சுட்டிக் காட்டுகிறாள் ராதே. அவர்களுக்கு இடையேயான ஊடல் பிரியும் அளவு பெரிதாக, முடிவில் இணைந்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை. அறிமுக நாயகனான கெளஷிக் ராம், ஷ்யாம் கதாபாத்திரத்திற்கு மிக அழகாகப் பொருந்தியுள்ளார். படத்தில் சிரித்த முகத்துடனேயே வரும் ராதே பாத்திரத்தை ஏற்றிருக்கும் அஞ்சலி நாயருடன...
எண்ணித்துணிக விமர்சனம்

எண்ணித்துணிக விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஒரு நகைக்கடைக் கொள்ளையில் மூன்று பேர் கொல்லப்பட, நாயகன் கொள்ளைக்காரர்களைத் தேடி அவர்கள் முன் நிற்கத் துணிகிறான். குற்றவாளிகளைத் தப்ப விடாமல் தண்டனை வாங்கித் தரவேண்டும் என்பதை மீறி நாயகனிடம் ஒரு சாகச உணர்வு தொற்றிக் கொள்கிறது. ‘அவங்க முன்னாடி போய் நிற்கணும்’ என்ற தீர்மானத்துடன் உள்ளார். அப்பொழுது போலீஸ்? ஐடியில் வேலை செய்யும் நாயகன் அளவிற்குக் கூட விசாரணையை மேற்கொள்ளாமல் சுதாரிப்பின்றி உள்ளனர். அதிலும் அமைச்சர் ஒருவர், போலீஸுக்குப் பயங்கர குடைச்சல் தருகிறார். அமைச்சராக வைபவின் அண்ணன் சுனில் நடித்துள்ளார். முதல் பாதியில், காலில் வெந்நீர் ஊற்றியது போல் ஓர் அவஸ்தையோடு வருபவர், இரண்டாம் பாதியில் ரசிக்க வைக்கிறார். அவரது ஜோடியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தும், தனது ஸ்க்ரீன் பிரசென்ஸால் மற்ற இருவரை விடத் தனித்துத் தெரிகிறார். கொள்ளைச் சம்பவத்தில் தன் கணவனை இழந்...