Shadow

Tag: அட்லீ

தீபிகா படுகோன் இன் #AA22xA6

தீபிகா படுகோன் இன் #AA22xA6

Others, காணொளிகள், சினிமா, திரைத் துளி
சன் பிக்சர்ஸ், ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன், இயக்குநர் அட்லீ இணைந்திருக்கும் #AA22xA6 படம் தொடர்பான புதிய தகவலைப் படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நூறு கோடி, இருநூறு கோடி, ஐநூறு கோடி ரூபாய் எனத் தொடர்ந்து இந்திய அளவிலான வசூல் கிளப்பில் இணைந்த படங்களைத் தயாரித்து, வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன் முதன் முறையாக பான்-வேர்ல்ட் திரைப்படமாக இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராகப் பயணிக்கத் தொடங்கி, ' ஜவான்' படத்தின் மூலம் இந்திய சினிமாவில் தன் பிரத்தியேக முத்திரையைப் பதித்த இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் #AA22xA6 படத்தில், இந்திய சினிமாவின் உலகளாவிய வசூலில் புதிய சரித்திர சாதனையைப் படைத்த 'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் அதிரடி ஆக்சன் நாயகனாக நடிக்கிறார். ...
அட்லீ தயாரிக்கும் பாலிவுட் திரைப்படம் “பேபி ஜான்” மே 31ல் வெளியாகும்

அட்லீ தயாரிக்கும் பாலிவுட் திரைப்படம் “பேபி ஜான்” மே 31ல் வெளியாகும்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் வருண் தவான் நடிக்கும் திரைப்படத்திற்கு 'பேபி ஜான்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் டைட்டிலுக்கான சிறப்பு வீடியோவும் வெளியானது.இயக்குநர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'பேபி ஜான்'. இதில் பாலிவுட் நட்சத்திர நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி 1‌ ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள...
உதவி இயக்குநர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அட்லீயின் “ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ்”  நிறுவனம்

உதவி இயக்குநர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அட்லீயின் “ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ்” நிறுவனம்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் வருண் தவான் நடிக்கும் 'VD18 ' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இயக்குநர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் 'VD18' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்தி திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திர நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி 1‌ ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரி...
”ஜவான்” கவுன்ட்-டவுன் ஸ்டார்ட்

”ஜவான்” கவுன்ட்-டவுன் ஸ்டார்ட்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
பாலிவுட் உலகின் கிங் கான் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் நடிப்பில் நம் ஊர் அட்லி இயக்கத்தில் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்க,  கெளரி கான் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'ஜவான்'  திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கு எகிறி இருக்கிறது. ஜவான் திரைப்படம் தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு செய்திகளும் தலைப்பு செய்திகளில் இடம் பெறும் அளவுக்கு முக்கியத்துவமாக கருதப்பட்டது.  இந்நிலையில்  ஜவான் படம் தொடர்பாக இதுவரை வந்த செய்திகளுக்கு முத்தாய்ப்பாக நடிகர் ஷாருக்கான் இன்று சமூக ஊடகத்தில், புத்தம் புதிய போஸ்டரை வெளியிட்டு படத்திற்கான கவுண்டவுனை துவக்கி வைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 7, 2023 அன்று திரையரங்குகளில்  பிரமாண்டமாக ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.இப்படத்தின் முந்தைய அறிவிப்புகள், எப்படி  ரசிகர்களிடம்  பொதுமக்களிடம் கவன ஈர்ப்பு பெற்றதோ, அதைவிட ஷாருக்கான் வெளியிட்டிருக்கும் ஜவான் தொ...