Shadow

Tag: அதிதி

டியூப்லைட் விமர்சனம்

டியூப்லைட் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு விபத்தில் அடிபட்டு, நாயகனுக்குக் கேட்டல் குறைப்பாடு ஏற்படுகிறது. அதாவது, சத்தத்தை அவரது மூளை உள்வாங்கிக் கொள்ள சுமார் 5 நிமிடங்கள் ஆகும். இந்த நொடி நீங்க நாயகனிடம் ஹலோ சொன்னால், அவருக்கு ஐந்து நிமிடங்கள் கழித்தே கேட்கும். ‘சாவு செய்தி சொன்னால் கருமாதி அன்று தான் அவருக்குக் கேட்கும்’ என்பதால், அவருக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் “டியூப்லைட்” என நாயகனுக்குப் பட்டப்பெயர் சூட்டுகிறார். அத்தகைய நாயகன், ஒரு பெண் மீது, கண்டதும் காதல் வயப்படுகிறார். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. நாயகனைச் சுற்றியே கதை நகர்கிறது. அவரது அறிமுகமும், அப்பொழுது அவரது ஆட்டமும், படம் நெடுகே அவருக்கு ஏற்படும் இக்கட்டினை அவர் முகத்தில் பிரதிபலிக்கும் விதத்திலும் அசத்தியுள்ளார். ராம் எனும் டியூப்லைட் பாத்திரத்தில் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார் இந்த்ரா. கார்பொரேட் கம்பெனிகளில் பணி புரியும் ஊழியர்களின்...
பட்டதாரி விமர்சனம்

பட்டதாரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வேலைக்குச் செல்லாமல், மதுரை மாநகரின் டீக்கடைகளில் பொழுது போக்குகிறார்கள் ஐந்து இளைஞர்கள். அவர்களில் நாயகன் சிவா மட்டும் பெண்கள் என்றால் பாராமுகமாய் உள்ளான். சிவா ஏன் அப்படி உள்ளான்? தன்னைக் காதலிக்கும் இலக்கியாவை அவன் ஏற்றுக் கொண்டானா? பட்டதாரி இளைஞர்கள் பிழைப்புக்கு என்ன செய்தார்கள் என்பதே படத்தின் கதை. சிவாவாக அபிசரவணன் நடித்துள்ளார். ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே!’ என்ற படத்தில் நாயகனாக நடித்தவர். ஊரோடு ஒத்துவாழ்வது போல், தற்போதைய ட்ரெண்டின் படி வேலை வெட்டியில்லாதவராக நடித்துள்ளார். அவரது நண்பர்கள் அனைவரும் பெண்கள் பின்னால் சுற்றிக் கொண்டிருக்க, அபிசரவணன் மட்டும் விதிவிலக்காய் இருக்கிறார். எந்தப் பெண்ணாவது கை கொடுத்தால் கூட, கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்துவிடுவார். ‘வாவ்..’ என நாயகனின் இந்தக் குணம் கண்டு காதலில் விழுகிறார் நாயாகி அதிதி. இலக்கியா எனும் அவர் ஏற்ற...