அதித்ரி – தாய்மையும், பெண்கள் முன்னேற்றமும்
சென்னையின் முன்னணி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான பில்ராத் ஹாஸ்பிடல்ஸ், அதித்ரி என்ற பெயரில் கருத்தரித்தல் மையத்தைத் தொடங்கியுள்ளது. ஜூன் 27, 2018 இல் தொடங்கப்பட்ட இந்தக் கருத்தரித்தல் மையம் குழந்தைப்பேறில் சிக்கலுள்ள தம்பதிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். அதித்ரியின் விரிவான மருத்துவச் சிகிச்சை , 'அட்வான்ஸ்டு அசிஸ்ட் ரீப்ரொடக்டிவ் ட்ரீட்மென்ட் (Advanced Assist Reproductive Treatment'-ஐச் சென்னையில் வழங்கவிருக்கிறது. பில்ராத் ஹாஸ்பிடல்ஸின் சி.இ.ஓ.-வான கல்பான ராஜேஷ் அவர்களின் மகள் பெயர் அதித்ரி என்பது குறிப்பிடத்தக்கது. அங்குப் பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் தங்கள் மகவுகளாகப் பாவிக்கவே அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இதைப் பிரதிபலிக்கும் வகையில், "மை கேர்ள் மை ப்ரைட் (My Girl My Pride)" என்ற தலைப்பில் குழு விவாத நிகழ்ச்சியொன்று சென்னை எழும்பூரிலுள்ள ராடிஸன் ப்ளூ ஹோட்டலில் அதித்ரி சார்பாக ...