Shadow

Tag: அந்தகன் திரைப்படம்

அந்தகன் விமர்சனம்

அந்தகன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அந்தகன் என்றால் பார்வையற்றவன் என்ற பொருள். 'அந்தாதுன்' எனும் ஹிந்திப்படத்தின் உரிமையை வாங்கி மறு உருவாக்கம் செய்துள்ளார் இயக்குநர் தியாகராஜன். பார்வையற்றவரான க்ரிஷ், பியானோ இசைக்கலைஞராக ஜூலியின் ரெஸ்டோபாரில் பணியில் சேருகிறார். அவரைத் தனது கல்யாண நாளன்று, தன் வீட்டில் வந்து வாசிக்கும்படி நடிகர் கார்த்திக் கேட்டுக் கொள்கிறார். க்ரிஷ், நடிகர் கார்த்திக்கின் வீட்டிற்குச் செல்ல, அங்கே கார்த்திக்கின்மனைவி சிமியால் கார்த்திக் கொல்லப்பட்டு இறந்துகிடக்கிறார். பார்வையற்றவர் என்ற போதும், தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததால் பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார் கிரிஷ். எப்படி அப்பிரச்சனையில் இருந்து மீள்கிறார் என்பதே படத்தின் கதை. ஐஸ்வர்யா ராயின் தீவிர ரசிகராகவும், ஆட்டோ ஓட்டுநராகவும் முரளி எனும் பாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். சிம்ரனை, 'ஆம்பளப் பொறுக்கி' எனத் திட்டுகிறார். சின்ன பாத்திரம...
“சிம்ரன் உற்ற நண்பி; வனிதா என் சகோதரி” – பிரஷாந்த் | அந்தகன்

“சிம்ரன் உற்ற நண்பி; வனிதா என் சகோதரி” – பிரஷாந்த் | அந்தகன்

சினிமா, திரைச் செய்தி
'டாப் ஸ்டார்' பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'அந்தகன்- தி பியானிஸ்ட்' திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது. அவ்விழாவில் பேசிய கதையின் நாயகன் பிரஷாந்த் பேசுகையில், '' 'அந்தகன்' அருமையான படைப்பு. இந்தத் திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். அனைவருடனும் மறக்க இயலாத அனுபவம் இருக்கிறது. இதில் ஐயா கனி சாரை மறக்க முடியாது. அவரை நான் ஐயா என்று தான் அழைப்பேன். அவரையும் சசிகுமாரையும் அலுவலகத்தில் இருக்கும் போது நான் நேரில் சென்று சந்தித்து இருக்கிறேன். அந்தத் தருணத்திலிருந்து இருவரையும் பின் தொடர்கிறேன். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய தேர்வு நடைபெறும் போது இயக்குநரின் பட்டியலில் கனி ஐயாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. அதன் பிறகு இயக்குநர் கனி சா...
அந்தகன் என்றால் என்ன? – இயக்குநர் தியாகராஜன்

அந்தகன் என்றால் என்ன? – இயக்குநர் தியாகராஜன்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
அந்தகன் என்ற தமிழ்ச்சொல்லுக்குப் பார்வையற்றவன் என்று பொருள். 'அந்தாதுன்' எனும் ஹிந்திப் படத்திற்கு உரிமை வாங்கு, பிரஷாந்தை கதையின் நாயகனாக நடிக்க வைத்து இயக்கியுள்ளார் தியாகராஜன். 'அந்தகன் - தி பியானிஸ்ட்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் தியாகராஜன், ''இன்றைய தினம் அனைவரையும் சந்திப்பதற்கு முக்கியமான காரணம் இன்று நண்பர்கள் தினம். உலகம் முழுவதும் இருக்கும் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள். இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நண்பர்களாகத்தான் பழகினார்கள். படப்பிடிப்பு ஒன்பது மணி என்றால் அனைவரும் ஒன்பது மணிக்கு படப்பிடிப்புத் தளத்தில் இருப்பார்கள். படப்பிடிப்பு அனுபவம் மகிழ்ச்சியாக இருக்கும். திட்டமிட்டதை விட படப்பிடிப்பை சீக்கிரமாக நிறைவு செய்து விடுவோம். சமுத்திரக்கனி, அந்த காலகட்டத்திய என்னை நினைவுப்படுத்துபவர். தோற...
“தமிழிற்கு எஸ்; தெலுங்கிற்கு நோ” – சமுத்திரக்கனி | அந்தகன்

“தமிழிற்கு எஸ்; தெலுங்கிற்கு நோ” – சமுத்திரக்கனி | அந்தகன்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
'டாப் ஸ்டார்' பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'அந்தகன்- தி பியானிஸ்ட்' திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது. அவ்விழாவில் பேசிய நடிகர் சமுத்திரக்கனி, "சசியை பல இடங்களில் நண்பன் பிரஷாந்த் நினைவுப்படுத்தினார். ஒரு முறை சசிக்குமார் கையில் வாட்ச் ஒன்றை அணிந்திருந்தார். அதனை உற்று நோக்கிக் கொண்டே இருந்தேன். மாலையில் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன், 'வா' என்று அழைத்துக் கொண்டு ஒரு கடிகார கடைக்கு அழைத்துச் சென்றான். அங்கு என்னிடம், 'நீ என் வாட்ச்சைப் பார்த்தாய் அல்லவா..! அதனால் உனக்குப் பிடித்த வாட்சை வாங்கிக்கொள்' என்றார். அவரிடம் உரிமையாக, 'எனக்கு அந்த வாட்ச் தான் பிடித்திருக்கிறது. அதனால் தான் அதனை உற்று நோக்கிக் கொண்டே இருந்தேன்' என்றேன். உடனே அவர், 'சரி அதை நீ கட்டிக் கொள். எனக்கு ஏதாவது ஒன்றைப் புதிதாகத் தேர்ந்தெடுத்துக் கொடு'' என்றார். அதேபோல் நண்ப...