‘களவாணி பசங்க’ பாடல் | கள்வன்
ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'கள்வன்' திரைப்படம் ஏப்ரல் 4, 2024 அன்று வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார் ரேவா. இந்தப் படத்தில் இருந்து ‘களவாணி பசங்க’ என்ற நான்காவது சிங்கிள் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு ஏகாதேசி பாடல் வரிகள் எழுதியுள்ளார். அந்தோணிதாசன் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். 'குவாட்டர் தெனம் வாங்கப் போறேன்...' எனத் தொடங்கியுள்ள இந்தப் பாடல் வெளியான உடனேயே பல லட்சம் பார்வைகளைக் கடந்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது.இந்தப் படத்தை முன்னணி ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் இயக்கியுள்ளார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி டில்லி பாபு தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் நக்கலைட்ஸ் டீம் ஜென்சன் திவாகர், பி...