கடைசி உலகப்போர் – ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே
ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் "கடைசி உலகப்போர்" ஆகும். மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ளது இப்படம்.
ராப் பாடகராக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்து, இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குநராகப் புகழ் பெற்றிருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சுந்தர். சி, "என்னோட மகள் கல்லூரியில் புதிதாக அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கிறார். அதை என் மனைவி வீடியோ எடுத்து அனுப்பி வைத்தார். அதைப்பார்த்த போது, எனக்குக் கண்ணீர் வந்தது. அதே போல் தான் என் தம்பிகளைப் பார்க்கும்போதும் வருகிறது. ...