ஜீ5 இன் அசத்தும் அனந்தமும், கலக்கும் கார்மேகமும்
ஐ.எம்.டி.பி. (IMDB)-இன் ‘டாப் தமிழ் வெப் சீரிஸ்’ பட்டியலில் இடம் பெற்ற 7-எபிசோட் கொண்ட ஜீ5 தொடரான, நடிகர் விமல் நடித்த “விலங்கு” இடம்பெற்றுள்ளது. இத்தளத்தின் சமீபத்திய வெளியீடுகளான ஏப்ரல் 2022 இல் பிரீமியர் செய்யப்பட்ட ‘அனந்தம்’ மற்றும் ‘கார்மேகம்’ வெளியான நாளிலிருந்தே பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இயக்குநர் ப்ரியாவின் ‘அனந்தம்’ அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் விருப்பமிகு தொடராக மாறியுள்ளது, பார்வையாளர்கள் இதன் சென்டிமென்ட் கலந்த உணர்வுபூர்வமான கதையினைக் கொண்டாடி வருகிறார்கள். உண்மையில், எண்ணற்ற நினைவுகளை, ஞாபகங்களை ஒருங்கிணைக்கும் ஒவ்வொரு வீட்டையும் போற்றும் ஒரு அஞ்சலியாகப் இத்தொடர் பாராட்டப்பட்டு வருகிறது. நன்கு எழுதப்பட்ட கதாபாத்திரங்கள், வித்தியாசமான உணர்வுகளுடன் கதைசொல்லலில் யதார்த்தமான அணுகுமுறை, நடிகர்களின் அட்டகாசமான நடிப்பு என இத்தொடரின் அனைத்து ...