Shadow

Tag: அனிதா சம்பத்

“சின்ன பட்ஜெட் படம் வேண்டாம் என்றால் புதுமுக இயக்குநர்களே வரமுடியாது” –  மிரியம்மா ஆடியோ வெளியீட்டில்  இயக்குநர் மாலதி நாராயணன்.

“சின்ன பட்ஜெட் படம் வேண்டாம் என்றால் புதுமுக இயக்குநர்களே வரமுடியாது” – மிரியம்மா ஆடியோ வெளியீட்டில் இயக்குநர் மாலதி நாராயணன்.

சினிமா, திரைச் செய்தி
ஸ்ரீசாய் ப்லிம் பேக்டரி என்னும் பட நிறுவனத்தின் சார்பில்  அறிமுக இயக்குநர் மாலதி நாராயணன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “மிரியம்மா..” நடிகை ரேகா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரோடு வி.ஜே.ஆஷிக், எழில் துரை, ஸ்நேகா குமார்,  அனிதா சம்பத், மாலதி நாராயணன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு ஏ.ஆர். ரெஹானா இசையமைத்திருக்கிறார்.  மூன் ராக்ஸ் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் பின்னணி இசை அமைத்திருக்கிறார்கள்.  ஜேஷன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவை கையாள, யாத்திசை புகழ் ரஞ்சித் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் இப்படத்தின் டிரைலர் மட்டும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.விழாவில் பேசிய நடிகர் ஆஷிக், இந்த மிரியம்மா படத்தின் புராஜக்ட் மிக வேகமாக நடந்து முடிந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் சில படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்தாண்டு...
தெய்வ மச்சான் விமர்சனம்

தெய்வ மச்சான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தபால் கார்த்திக்கின் கனவில், வெள்ளைக் குதிரையுடன் ஒருவர் வந்து யாராவது இறந்து விடுவார்கள் எனச் சொன்னால் அது பலித்துவிடும். அவனது தங்கை குங்குமத்தேனுக்கு, பல சம்பந்தங்கள் தள்ளிப் போய், ஒரு நல்ல வரன் அமைகிறது. ஆனால், கல்யாணம் ஆன இரண்டு நாளில் கார்த்தியின் மச்சான் அழகர் என கனவு வர, தன் மச்சானின் உயிரை எப்படியாவது காப்பாற்ற நினைக்கிறான் கார்த்திக். கனவில் கண்டது நடந்ததா, இல்லை கார்த்திக்கால் தன் மச்சான் அழகரைக் காப்பாற்ற முடிந்ததா என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தின் தொடக்கப்புள்ளி, விலங்கு இணைய தொடரின் படப்பிடிப்பில் போடப்பட்டதால், பாலசரவணனையும், கிச்சா ரவியையும் படத்துக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். பாலசரவணன் ஓரளவு படத்தின் கலகலப்பிற்கு உதவினாலும், திரைக்கதை ஒத்துழைக்காததால் விழலுக்கு இறைத்த நீராகிவிடுகிறார். கிச்சா ரவியும் கைவிட, அவரது மனைவியாக நடித்துள்ள தீபா சங்கர் மட்டும் தன் அதீத நடி...
“ஓவர் ஆக்டிங்கைக் குறைத்துக் கொள்கிறேன்” – ‘தெய்வ மச்சான்’ தீபா ஷங்கர்

“ஓவர் ஆக்டிங்கைக் குறைத்துக் கொள்கிறேன்” – ‘தெய்வ மச்சான்’ தீபா ஷங்கர்

சினிமா, திரைச் செய்தி
உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'தெய்வ மச்சான்'. அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் விமல், பாண்டியராஜன் 'ஆடுகளம்' நரேன், பால சரவணன், அனிதா சம்பத், வத்சன் வீரமணி, தீபா சங்கர், கிச்சா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கேமில் ஜெ அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு காட்வின் ஜெ. கோடன் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்குப் பின்னணி இசை அஜீஸ் கவனித்திருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. ஏப்ரல் 21ஆம் தேதி அன்று ...