ஏகாந்தம் விமர்சனம்
சென்னையில் பணி புரிபவர் விவாந்த். கிராமத்தில் இருக்கும் தனது மாமன் மகளைக் காதலித்து வருகிறார். அத்தை மகன் மீது உயிரையே வைத்துள்ளார் நீரஜா. அவர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம், திடீரென நின்று விடுகிறது. அக்கல்யாணம் ஏன் எதற்காக நின்றது என்றும், அது குடும்பங்களுக்குள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது என்றும் கதை நீள்கிறது.
கிராமத்துப் பண்பாட்டிற்கும், நகரத்து நாகரீகத்துக்கும் உள்ள ஏற்ற இறக்கங்களைச் சொல்ல முயற்சி செய்கிறது படம்.
கதைக்குள் செல்லாமல், முதல் பாதியில் படம் ஏற்படுத்தும் சலிப்பு ஏகத்துக்கும் நெளிய வைக்கிறது. முன்னோர்கள் நமக்களித்த சிலம்பம், சித்த மருத்துவம் எல்லாம் அழிந்து கொண்டு வருகிறதும் அவற்றைக் காக்கவேண்டியது நம் பொறுப்பு என வலியுறுத்தும் காட்சிகளுக்குப் பிரத்தியக கவனமும் முக்கியத்துவமும் அளித்துள்ளார் இயக்குநர் ஆர்செல் ஆறுமுகம். மனோபாலாவின் உதவியாளரான இவர், ஜெயா டீ...