Shadow

Tag: அனுமோல்

ஹரா | மைக் மோகனின் ஜோடியாக அனுமோல்

ஹரா | மைக் மோகனின் ஜோடியாக அனுமோல்

சினிமா, திரைத் துளி
பதினான்கு வருடங்களுக்குப் பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் 'ஹரா' திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜிக்கு சாலை விபத்தில் படுகாயம் ஏற்பட்டதால் அவரது சிகிச்சையின் காரணமாகப் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே, 'ஹரா' திரைப்படத்தின் அதிரடியான டீசர் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 68' திரைப்படத்தில் எதிர் நாயகனாக நடிக்க மோகன் ஒப்பந்தமானார். இதன் காரணமாக, 'ஹரா' படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கிய போது தேதிகள் ஒத்துழைக்காததால் ஏற்கெனவே ஒப்பந்தமான பிரபல நடிகைக்குப் பதில் மோகன் ஜோடியாக அனுமோல் நடித்துள்ளார். சிறப்பான பங்களிப்பை அனுமோல் வழங்கி உள்ளதாகவும் அவரது கத...
ஒருநாள் இரவில் விமர்சனம்

ஒருநாள் இரவில் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
போதையில் சபலத்துக்கு ஆட்படும் ஒரு நடுத்தரக் குடும்பத்தினன், ஒருநாள் முழுவதும் அனுபவிக்கும் மான ரோஷப் பதற்றம்தான் படத்தின் கதை. 2012 இல் வெளியான 'ஷட்டர்' எனும் மலையாளப் படத்துக்கு முறைப்படி உரிமை வாங்கி, ரீமேக் செய்து தமிழ்ப் படமாக வழங்கியுள்ளார் இயக்குநர் விஜய். இசை, பாகுபலியைத் தொடர்ந்து, சத்யராஜின் மற்றுமொரு பிரம்மாண்டப் பரிணாமமாக அவர் நடித்திருக்கும் சேகர் கதாபாத்திரத்தைச் சொல்லலாம். அவரின் தவிப்பும் பதற்றமும் பார்வையாளரையும் பீடிக்கிறது. அவருக்கு ஏற்படும் கோபம், அதாவது மகள் மீதான கோபமன்று, உடனிருப்போரின் சுயரூபம் தெரிவதால் ஏற்படும் கோபம் நமக்கும் தொற்றிக் கொள்கிறது. தளர்வான நடையையும், விரக்தி படிந்த தோற்றத்தையும் வைத்துக் கொண்டு யூகி சேது ஏகத்துக்கும் கவர்கிறார். நையாண்டி தர்பாரின் குரல் இன்னும் மாறவில்லையே தவிர்த்து, சிறந்த குணசித்திர நடிகராக தன்னை நிரூபித்து வருகிறார். பஞ்சதந்திரம்...