Shadow

Tag: அனு இம்மானுவேல்

ஜப்பான் விமர்சனம்

ஜப்பான் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கடந்த வருடத்தின் தீபாவளி வெற்றியாளரான ‘சர்தார்’ படத்தின் நாயகனான கார்த்தியின் படமென்பதாலும், குக்கூ, ஜோக்கர் முதலிய படங்களை இயக்கிய எழுத்தாளர் ராஜுமுருகனின் படமென்பதாலும், ஜப்பான் மீதோர் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. இருநூறு கோடி ரூபாய் பெறுமானமுள்ள நகைகள், ராயல் நகைக்கடையின் சுவரைத் துளையிட்டுத் திருடப்பட்டுவிடுகின்றன. முதற்கட்ட விசாரணையில், கொள்ளை நடந்த பாங்கினைக் கொண்டு, கொள்ளையடித்தது ஜப்பான் என உறுதி செய்கின்றது காவல்துறை. ஜெகஜால கில்லாடியான ஜப்பானைக் காவல்துறையால் பிடிக்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை. கங்காதரராக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். படத்தின் அசுவராசியத்திற்குக் காரணம், கங்காதரர் போல் முழுமை பெறாத கதாபாத்திரங்களே காரணமாகும். பிரதான கதாபாத்திரம் ஏற்றிருக்கும் ஜித்தன் ரமேஷைக் கூட சரியாகப் பயன்படுத்தாதது, திரைக்கதையின் பலவீனத்துக்கு அச்சாரம் இட்டுள்ளது. ‘அண்ணாமலை...
நம்ம வீட்டுப் பிள்ளை விமர்சனம்

நம்ம வீட்டுப் பிள்ளை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஓர் அழகான பெண்ணைப் பார்த்ததும், உடனே காதலில் விழுந்து, அந்தப் பெண்ணையே சுற்றிச் சுற்றி வந்து லவ் டார்ச்சர் செய்யும் கதாபாத்திரத்திற்கு முழுக்கு போட்டு, அரும்பொன் எனும் நல்ல பையன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுவும், பெண்ணைப் பார்த்தால் மண்ணைப் பார்க்கும் நேர்மாறான பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் ஒரே ஆசுவாசம் இதுதான். சுற்றம் சூழ வாழ்ந்தாலும், அரும்பொன்னின் குடும்பத்தைத் தகுதி, தராதரம் பார்த்து ஒதுக்கி வைக்கின்றனர் அவனது நெருங்கிய உறவினர். அத்தகைய உறவினர்களின் வீட்டுப் பிள்ளையாக, அரும்பொன் எப்படி மாறுகின்றான் என்பதுதான் படத்தின் கதை. நடிகர் பட்டாளம் நிரம்பிய திருவிழா கோலமாக உள்ளது படத்தின் முதற்பாதி. இன்னார் இன்னின்ன சொந்தங்கள் எனச் சொல்லி முடிப்பதற்கே முக்கால் மணி நேரம் எடுத்துக் கொண்டுள்ளார் பாண்டிராஜ். கதையின் ஊடாகக் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த முயலாமல், அதைப் பாட்டாகவே ...
என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா விமர்சனம்

என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இந்தியாவின் மீது தீவிர காதல் கொண்ட பெருங்கோபக்காரனான சூர்யா இராணுவத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறான். அவன் விருப்பப்பட்ட எல்லைக் காவல் வேலை, சூர்யாவிற்குக் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. 'கோபம் வந்துச்சு. அடிச்சேன்' என்ற சூர்யாவின் அறிமுக அத்தியாயமே தூள். 'இவன் தான் சூர்யா' எனப் பார்வையாளர்களை முழுப் படத்திற்கும் தயாராக்கிவிடுகிறார் இயக்குநர் வம்சி. முறுக்கேறிய உடலுடம் ஸ்டைலிஷ் ஆக்டர் அல்லு அர்ஜுன், சூர்யா பாத்திரத்திற்குக் கனகச்சிதமாய்ப் பொருந்துகிறார். கோச்சா, ரவி வர்மா, பீட்டர் ஹெய்ன், ராம் லக்‌ஷ்மன் என நான்கு ஸ்டன்ட் மாஸ்டர்களும் சூர்யா பாத்திரத்திற்கு உரம் சேர்த்துள்ளனர் என்றே சொல்லவேண்டும். அதகளமான சண்டையில் தொடங்கும் படம், அதே போலொரு சண்டையினோடு இடைவேளையில் முடிகிறது. அதன் பின், அதிரடியான சண்டை ப்ரீ-க்ளைமேக்ஸில் தான் வருகிறது. ஆம், படத்தின் க்ளைமேக்ஸில் சண்டை இல்லை. ...
துப்பறிவாளன் விமர்சனம்

துப்பறிவாளன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு சிறுவனின் செல்ல நாய் துப்பாக்கிக் குண்டால் சுடப்பட்டு இறக்கிறது. அச்சிறுவன் இணையத்தில் ஒரு துப்பறிவாளரைத் தேடி, நாயைக் கொன்றவனைக் கண்டுபிடிக்கச் சொல்லி தன் சேமிப்பான என்னூத்தி சொச்சம் ரூபாயைத் தனியார் துப்பறிவாளரிடம் தருகிறான். அந்த வழக்கு, துப்பறிவாளர் கணியன் பூங்குன்றனை எங்கெல்லாம் கொண்டு செல்கிறது என்பதுதான் படத்தின் கதை. முகமூடி படத்தின் ஹேங் ஓவர் முழுவதுமாக இயக்குநர் மிஷ்கினுக்கு விலகியதாகத் தெரியவில்லை. இந்தப் படத்தின் நாயகனும் சூப்பர் ஹீரோ. சகலகலா வல்லவன். தொழிற்முறை (!?) கொலைக்காரர்கள் எனச் சொல்லப்படுகிறவர்கள், நாயகனைச் சைனீஸ் ரெஸ்டாரன்ட்டிற்கு வருமாறு பகிரங்க அழைப்பு விடுத்து, கத்தியை அவர் மீது வீசிக் கொல்ல முனைகின்றனர். அனைவரையும் அசால்ட்டாக அலட்டிக் கொள்ளாமல் தெறிக்க விடுகிறார் (நாயகன் சீனர்களைத் துவம்சம் செய்யும் அக்காட்சி பக்தாஸைப் பரவசப்படுத்தும் என்பதில் நோ டவுட்). ஆர...